Indhu Dhivya

Fantasy Inspirational

4  

Indhu Dhivya

Fantasy Inspirational

அழகிய உறவு

அழகிய உறவு

1 min
294


இனி உன்னோடு தான் இனி உன்னோடு தான்!!

காலம் முடியும் வரை உன்னோடு நான்!!!

ஓர் நொடியில் என்னுள் நுழைந்தாயே

தினமும் என் கனவில் மிளிர்ந்தாயே!!!

உன் குணத்தால் என்னை கவர்ந்தாயே 

உன் கன்னியத்தால் என்னை கரைய செய்தாயே!!!!

உன் பொய்யற்ற கண்கள் மூலம் என்னை கடத்தி சென்றாயே!!!!

என்னை விட என்னை அறிந்தவனானாயே!!

என் கண்கள் மூலம் என் தேவையைஅறிந்து கொள்ளும் கள்ளவனுமானாய்!!!!

என் கவனத்தை கலைக்கும் காரணமாயும் ஆனாய்....

என் மனதின் சுவரில் அழியா சித்திரமானாய்!!!!

என் மெளனம் கலைக்கும் மழலை ஆனாய்!!!!

நான் என்றும் ரசிக்கும் நாயகன் ஆனாய்!!!

என்றும் என் கண்கள் தேடும் காவியன் ஆனாய்!!!

என் கால பயணத்தின் அழகிய பகுதியும் பாதியும் ஆனாய்!!

என் இதய பூட்டை திறக்கும் மந்திர கோள் ஆனாய்...

என் வாழ்க்கையில் ,புதிராய் வந்து என் வாழ்க்கை புதிரின் விடையானாய்....

இனி உன் கைகளோடு கோர்த்து கொண்டு செல்ல போகுதே!!! என் வாழ்க்கை பயணம்...

நீ எனக்கென கடவுள் கொடத்த அழகிய புதினம்...

காலம் முடியும் வரைஉன்னோடு தான் ....

கால முடிந்த பிறகும் என்றும் மாறாத உன் நினைவோடு நான்....



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Fantasy