STORYMIRROR

anuradha nazeer

Classics

3  

anuradha nazeer

Classics

ஐஸ்வர்யம் பெருகும்

ஐஸ்வர்யம் பெருகும்

1 min
205

*தொழிலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைளும் தீர இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து ஐஸ்வர்யம் பெருகும்*

*மஹாலக்ஷ்மி அன்னையை மனதில் நினைத்து அனைத்து வெள்ளிகிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் கற்பூரம் ஏலக்காய் கலந்த காய்ச்சிய பால் மற்றும் வெற்றிலைபாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் போன்றவற்றை அன்னைக்கு படைத்து*

“ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ”

*என்னும் மந்திரத்தை உச்சரித்தால் தொழில் முன்னேற்றம் அடைந்து வளம் பெருகும்.*

*இந்த மந்திரத்தின் பொருளானது, "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள உம்மை வேண்டுகிறேன்" என்பதாகும்*

*மஹாலெட்சுமி குபேர எந்திரத்தின் முன்பு நெய் அல்லது நல்லெண்னை ஊற்றி விளக்கேற்றி அந்த தீபத்தை வணங்கி பூஜித்து தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொண்டு. தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருப்பு மையை நெற்றியில் இட்டுக் கொண்டால் சிறந்த பலன்களைத் தரும். தம்மால் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால் தொழில் முன்னேற்றமடைந்து கடன் தொல்லைகள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகும்*


Rate this content
Log in

Similar tamil story from Classics