வகுப்பறைகள்
வகுப்பறைகள்


நிலமறிந்து விதைப்பதும்
நீரறிந்து பாய்ச்சுவதும்
தேவை அறிந்து உரமும்
சேவை அறிந்து அரவணைப்பும்
வருங்கால அறுவடையின்
சாகுபடிக்கு மட்டுமல்ல
எதிர்கால தலைமுறையை
ஆக்கப்பூர்வமாக ஆற்றுப் படுத்துதல்
வகுப்பறைகளில்தான்
வடிவமைக்கப்பட வேண்டும்
நம்பிக்கை விதைகள்
தனித்திறன்களின் பலத்தை
தும்பிக்கையாக
வானத்தையும் காட்டி
சிறகிற்கும் வலுவூட்டி
தடுக்கி விழுந்தால் தாங்கி
முடுக்கங்களை மனதில் விதைத்து
திறனும் தேவையுணர்ந்து
வழிகாட்டுபவை வகுப்பறைகளே அவை
மனித வளத்தின் அடித்தளம்
மானுட வளர்ச்சியின் போர்க்கள