குழந்தைகள்
குழந்தைகள்
எப்போதும் மரப்பாச்சி பொம்மையை
தன் கைக்குள்ளே வைத்துக் கொள்ளும்
விழித்திருக்கும் அதனோடு
விளையாடும் போதும்
தன் நண்பனாகப் பாவித்து
நட்புடன் பேசுவதே
அதுஒரு தனி மழலைக் கலை
நீராட்டித் துடைத்து பவுடர் பூசி
பொட்டிட்டு துணிஉடுத்தி
அம்மா தன்னை அழகு செய்வதுபோல்
அனைத்து பாவனைகளும்
மரப்பாச்சிப் பொம்மைக்கு உண்டு
அழகான யுவதி போல் தரையில் கிடத்தி
காற்றிலிருந்து பூவை வரவழைத்து
தலையில் சூடும் பாவனைகள்
பெண் குழந்தைகளுக்கே உரியது
அழுதல் பேசுதல் சிரித்தல்
அணைத்துக் கொண்டு தூங்குதல்
விழித்தவுடன் மரப்பாச்சியை
வினயத்துடன் பிரியாதிருத்தல்
இது குழந்தைகளின் யுகம்
தற்போது
அலைபேசிகளோடு விளையாடி
அம்மாக்களோடு சிரித்தபடி
பூரித்துப் போகின்றனர் பெற்றோர்கள்
இரண்டும் பொம்மைகளே
ஆனால் என்ன!
அலைபேசி பேசுகிறது.