விந்தையின் தந்தை
விந்தையின் தந்தை
என்னை தந்த தந்தையின் கைகளுக்கு என் மன கைகளால்.....
விந்தையாக எப்பொழுதும் பார்ப்பேன் என் தந்தையை!
பெயரிலோ ஆதி! ஆனால் அதிவேகமில்லா குடும்பத்தை ஒட்டினாய்..
உனது ஓட்டம் எங்கள் கைகளில் பரிசாக பட்டம்..
அடித்து முடித்த பின் எங்களை வாரி அணைக்கும் நெஞ்சம்
சாட்சியில்லா! மனசாட்சியில் வாழும் உன் உள்ளம்
உறவுகளுக்கோ! ஓய்வுயில்லா ஓடி உழைக்கும் உன் எண்ணம்..
ஓய்வுபெற்றும்!! ஒய்வுயில்லா ஓயாமல் உழைக்கும் தேரோட்டியே!
மூச்சு காற்று குடுத்தாய் சக்கரங்களுக்கு, அக்கரையுள்ள நான்கும் உன்னை தங்கி பிடிக்கும் .
தலைமை செயலகத்தின் காற்று உன்னை பற்றியதால், உன் தலைமையால் நிமிர்ந்தது பல தலைமுறை...
நிதியில்லா காலம்போய், நிதித்துறை உன்னிடம் கை ஏந்தும்...
ஆட்டோ ஒட்டிய கைகளால் ஒரே ஒரு ஆட்டோகிராப் தருவாயோ!
என் வரிகள் அனைத்தும் உன் கால் அடியில்...