தற்செயல்கள்
தற்செயல்கள்
தற்செயல்கள்!
அவை நற்செயல்கள்!
பிரபஞ்சம் நடத்தும் நாடகங்கள்!
ஒரு பேராற்றல்
இந்த பிரபஞ்சத்தை
தன் செயலால் நிர்வகிக்கிறது
அதில் நாம் ஓர்
அங்கம் வகிக்கிறோம்
உறைந்துகிடக்கும் கடந்த காலத்தை
உயிர்ப்பித்து நினைக்க
தற்செயல்களின் தாண்டவமும்
அதன் பின் இருந்த ஆண்டவமும்
நினைவலைகளில் நிதர்சனமாக!