STORYMIRROR

Selvakumar Selvaraj

Abstract

4  

Selvakumar Selvaraj

Abstract

கலியுகம்

கலியுகம்

1 min
24.2K

ஆண்மைஇல்லா ஆண்கள்

பெண்மையில்லா பெண்கள்

உண்மையில்லா உண்மை

ஊமையான ஊடகம்

உயிரல்லாத மூச்சு

பாசமில்லா பந்தம்

வம்சமில்லா வாழ்க்கை

கற்பில்லாத கண்ணகிகள்

பொறுப்பில்லாத மனிதர்கள்

செருப்பில்லாத ஏழைகள்

பருப்பில்லாத பழங்கள்

தண்ணீரில்லா குளங்கள்

மறைந்திருக்கும் சித்தர்கள்

பிதற்றும் பித்தர்கள்

ஏமாற்றும் எத்தர்கள்

விற்கும் விளம்பரங்கள்

சம்பாதிக்கும் பம்பரங்கள் (மனிதர்கள்)

கல்லான கடவுள்கள்

புல்லான புருஷர்கள்

வீரியமில்லா விதைகள்

வெட்டியாய் பல கதைகள்

காசாகும் சதைகள்

படமாகும் சதைபிண்டங்கள்

காணமல் போன மண்பாண்டங்கள்

மனித குலத்துக்கு பல கண்டங்கள்

விற்பனையில் பல காண்டங்கள்

படிக்காமல் விட்ட இதிகாச காண்டங்கள்

ஆங்காங்கே கண்ணீர் பந்தல்கள்

ஆசிரியர்களாகும் சிறியர்கள்

ஒரு சில சாதி வெறியர்கள்


தெரிந்துவிட்டது

உலகம் முன்னமே அழிந்துவிட்டது

இன்னும் என்ன இருக்கிறது

அழிவதற்கு

இனி எந்த சுனாமிக்கும்

அவசியமில்லை


Rate this content
Log in

Similar tamil poem from Abstract