திருமந்திரம்
திருமந்திரம்
9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே. 9 வணங்கக் கூடியவர் எவரும் இல்லாதவன்! இறைவன் பொன்னால் இயற்றப்பட்டாற் போன்ற அழகிய சடை பின்புறம் விளங்க விளங்குபவன். நந்தி என்பது அவனது திருநாமமாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத் தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.
