ராணுவம் நமக்கு வீர வெளிச்சம்
ராணுவம் நமக்கு வீர வெளிச்சம்


பாரினில் நீ தூங்க,
பார்முனை போரினில்
அவன் விழிப்பான்.
பண்டிகைகள் நீ களிக்க,
படைகளிலே அவன்
நாள் கழிப்பான்.
வீடும் மக்களும்
அவனுக்கும் உண்டு.
அதை விட்டுக் கிடப்பான்
உன்னை மனதில் கொண்டு.
உன் நலம் கருதி,
வெளிவரும் அவன் குருதி.
அவன் களம் செல்வான்,
உன் குலம் கருதி.
தீவிரமாய் உலாவும்
தீவிரவாத இருளை,
ஓர் வரமாய் ஒழிக்க வந்த யாவரும் வீர வெளிச்சங்களே!