பொருளாதாரம்
பொருளாதாரம்
மல்லிகைப்பூ மனமும் பிடிக்காமல் போனது ஒரு முழம் 400 என்றதும்.
தங்கத்தில் பரிசளிக்க திட்டமிட்டேன் நண்பனின் திருமணத்திற்கு
கடைசியில் கிராம் 4000ம் தாண்டியதும்
அவனின் திருமணத்திற்கு போவதை நிறுத்திக் கொண்டேன்.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் உயர்வு
என முனுமுனுத்தேன்
அடுத்தநாளே அரைசதம் அடித்தது பாலாய்ப்போன மின்சார கட்டணம்.
எவன் நாட்டிலேயோ சண்டை எந்நாட்டில் எகிறியது பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
அரசு கொடுத்த ஆயிரம் ரூபாயை எதற்கு செலவழிப்பது மின்சாரத்திற்கா அல்லது சிலிண்டருக்கா என யோசிப்பதிலேயே தூக்கம் பறிபோனது.
பக்கத்தில் இருந்த என் நண்பர்கள் கூட எந்த உதவி என்றாலும் என்னிடம் கேள் என்றார்கள் கேட்கும்போது உதாசீனப்படுத்தினார்கள்.
இதெல்லாம் கண்டித்து திமிர் எழுந்தேன் திருப்பி அடித்தது எனது குறுஞ்செய்தி இன்றுடன் உங்களது ஜியோ ரீசார்ஜ் முடிந்து விட்டது என.
அடங்க மறுத்தாலும் அத்துமீறினாலும் திருப்பி அடிக்கும் இந்த பொருளாதாரத்தை நான் என்ன செய்வது நிலைகுலைந்து தான் போவேனோ...
