பாவம் போக்க அவதாரம்
பாவம் போக்க அவதாரம்
பாவம் போக்க அவதாரம்
-----------------------------------------------
அன்பை விதைக்க
அவதரித்த கனியே!
ஆன்மீக அறுவடை
ஆயுத கூர்மையே!
இன்பமும் உண்டு
இன்மை கொட்டகையில்
ஈன்ற பொழுதிலும்
ஈகை செய்கையில் - என்ற
உண்மை உணர்த்திட
உருவான கருவே !
ஊன்றுகோலாக பிணியாளரை
ஊக்கப்படுத்தி குணமாக்கியே
என் யென வாழாது
எல்லோருக்கும் பிறந்திடுவாய் !
ஏனையோர் பாவங்களை
ஏற்றுக்கொள்ள வாரீரோ
ஒன்னார் மனிதனாக
ஒருபிறவி உலகிலே...
ஓணான் போன்றோர்க்கு
ஓளடதமாக ஒருமுறை ..
சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
