பாட்டி
பாட்டி
1 min
0
பாட்டி
பட்டி தொட்டியெங்கும்
பாட்டிகள் பலருண்டு
தட்டியெழுப்பும் சிந்தனை
சுட்டிக் கதைகள்
கட்டிகட்டியாக சொல்வதுண்டு
கேட்டிடும் சிறுகதையால்
லட்சியம் கொண்டு
கட்டிய வெற்றிகள்
பட்டியலாக பலபல..
தனிக் குடித்தனம்
தனித்து வைத்தது
கனிந்த பாட்டியை..
தணிந்தது அனுபவம்
துணிவும் மலிந்தது
பன்மை நாகரீக
பண்பாட்டை இழந்தோமே..
கூட்டுக் குடும்பம்
கட்டமைத்து பெரியோரிடம்
நட்பை வளர்ப்போமே...
ஒட்டும் உறவுகள்
காட்டிடும் அன்பை
எட்டுத்திக்கும் பெற்று
எட்டிப் பிடிப்போம்
பாட்டி வழியில்..வெற்றிகளை...
சமத்துவ புறா ஞான.அ.பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
