சமத்துவ புறா.ஞான.அ.பாக்கியராஜ் மேலக்கலங்கல்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்கியராஜ் மேலக்கலங்கல்
1 min
20
இந்து தாய்
பாலலூட்டினாள் அக்பர்க்கு
இஸ்லாம் தாய்
பாலூட்டினாள் ஐயா தேவர்க்கு..
இந்த தாய்களிடம்
இல்லாத மதவெறி
பிள்ளைகள் உங்களிடம்
எப்படி வந்தது
மதவெறி...
இயற்கை அன்னை
ஈன்ற மலைக்கு
இந்து மலை
இஸ்லாம் மலை
பெயர் வைக்க
பேரறிவற்ற நீ யார்?
ஆறு அடி
மண்ணுக்கு இஸ்லாமியரே
நீ சொந்தம்
இரு நொடி வீசும்
காற்றுக்கு இந்துவே
நீ சொந்தம்
நீயே உனக்கு
சொந்தமில்லை
உனக்கு ஏன்டா
மலைச் சொந்தம்...
சமத்துவ புறா.ஞான.அ.பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
