நண்பன்
நண்பன்
உறவால் அல்ல
உணர்வால் ஒன்றிணைந்தவர்கள்
உலகே வியந்து போற்றும்
உன்னதம் நட்பு
நண்பன் மடி சாய்ந்தால்
கவலைகளும் விட்டு ஓடிவிடும்
பேசாத மொழிகளையும்
புரிந்து கொள்வான்
தாய்க்கு பின்
சுயநலமில்லாத அன்பை
காட்டுபவன் நண்பன் ஒருவனே
மிக பெரிய சொத்து
மாளிகையோ மண்டபமோ அல்ல
மனதை புரிந்து கொள்ளும்
நண்பன் ஒருவனே
சிறந்த நண்பனை பெற்ற
அனைவரும் அதிர்ஷ்டசாலிகளே!!
