மர்மமான பெண்
மர்மமான பெண்
இப்படி செய்வாள் என
துளியும் எதிர்பார்க்கவில்லை
அவளை பொத்தி பொத்தி வளர்த்தேன்
அன்ஸ்லி என பெயர் வைத்தேன்
நேரம் தவறாமல் உணவளிப்பேன்
பல வண்ண பழம் திண்பாள்
அவள் அழகின் காரணமும் அதுவே!!!
அடைந்தே கிடப்பதால்
அவள் சுதந்திரம் கெட கூடாதென
வெளியில் அனுப்பினேன்
இரண்டுநாள் திரும்பி வந்தாள்
மூன்றாம் நாள் அவள் காதலனோடு
மர்மமானாள் நான் வளர்த்த கிளி!!!