குடும்பம்
குடும்பம்
ஐந்தெழுத்து கோவிலில்
மூன்றெழுத்து தெய்வங்கள்,
நானென்பது எதுவரை
நாமென்பதே தலைமுறை.
நித்தம் நித்தம் நீங்குதே
நினைவெல்லாம் ஏங்குதே,
கூட்டமாய் இருந்ததே - இன்றோ
சிறகொடிந்த பறவையாய்.
தாத்தா பேரன் சண்டையில்
உலகப் போர் தோற்று போகும்,
கொரோனாக் கூட
பயந்தோடிப் போகும்.
எத்தனையோ காலமாய்
சேர்ந்திருந்த உறவுமுறை,
கலாச்சார சீரழிவால்
0);">பிரிந்திருக்கும் தலைமுறை.
கட்டுச்சோறு என்றாலும்
கூடித்திண்ணும் பழக்கங்கள்;
இன்று பீஸ்ஸாவும் பர்கரும்,
தனித்திண்ணும் வழக்கங்கள்.
எத்தனைதான் பிரச்சினை என்றாலும்
கலந்து பேசி தீர்த்ததென்ன;
சிறு பிரச்சினை என்றாலும் தனித்திருத்தலால்
தற்கொலை தானே தீர்வாகிறது.
ஐந்தெழுத்து கோவிலில்
மூன்றெழுத்து தெய்வங்கள்...
அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி,
அக்கா, அண்ணா, தம்பி, தங்கை,
மனைவி, பிள்ளை - இதுதான் தெய்வங்கள்...
குடும்பமே கோவில்!!!