கனவில் வந்த கரும்பு தோட்டம்..
கனவில் வந்த கரும்பு தோட்டம்..


கரும்பு தின்ன ஆசைகொண்டு
கரும்புத் தோட்டம் புகுந்தேன்..
கனுக்கள் கொண்ட கரும்பினை, என் கைகள் கொண்டு உடைத்தேன்...
திரும்பி வளைந்து நின்றதே,
விரும்பி மீண்டும் கால்களால்
மடக்கி பிடித்து உடைத்தனே.. உடைந்தது...கரும்பு அல்ல, என் கால்கள்....ஆசை வலியை வென்றதால் பல்லைக்கொண்டு பதம் பார்க்க நறுக்கென கடித்தேன் ..அலறல் சத்தம் கேட்டது....எழுந்தாள்
உதைத்தாலே ஒரு உதை ..எல்லாம் புரிந்தது ...கரும்புத்தோட்டம் கனவென்று....