காதல் தவிப்பு
காதல் தவிப்பு
விழிகளில் கசியும்
நீர் வழியே
காதலை கடத்துகிறேன்
அவனிடத்தில்
இறுக பற்றிய
விரல் நெருக்கத்தில்
உணர்கிறேன்
எனக்கான அவனின் தவிப்புகளை
கால தாமதம் ஆனாலும்
எந்தன் படகும்
கரை சென்று சேரும்
என்றோ ஒருநாளில்
தவிப்புகளை தவிர்க்காமல்
ஏற்கிறேன் எங்கள்
பந்தத்தை இன்னும்
ஆழமாக்கும் என்பதால்...

