காதல் கணவா
காதல் கணவா
கதிரவனின் கீற்று பட்டால்
கரைந்திடும் பனி போல
உன் காந்த குரலில்
உருகி போனேன் நானடா
விழிகளின் மொழி அதனில்
வார்த்தைதனை மறந்தேனடா
நீ இல்லா நொடிப்பொழுதில்
நான் வர்ணமில்லா வானவில்லடா
ஜோடியாய் பறந்து திரிந்த வானில்
கருநீல மேகங்களுக்கிடையே
தனியாய் தவிக்க விட்டு போனதேனடா...

