என்னில் பெருமழை
என்னில் பெருமழை


வானை
அன்று போலவே
கருப்பு மேகங்கள்
சூழ்கிறது கண்மனி.
இரு கூறெனப் பிளக்கும்
மின்னல்கள்
வெள்ளிக் கற்றைகளாய்
மின்னுகிறது.அதன் ஊடே
கிழிபட்ட மெல்லிய
நெகிழிப்
பையிலிருந்து வெளிவரும்
வேகத்துடன்
பொழிந்து தீர்க்கிறது
மாமழை.
நீ பார்த்திருக்க
வாய்ப்பில்லை
சகி.
முந்தைய மழைக்
காலத்தில்
நம் காதல் அத்தியாயம்
முடிவுற்ற நாளில்,
இன்னும் சரியாக
சொன்னப்போனால்
உன்னால் குப்பையென நான்
தூக்கியெறியப்பட்ட
அந்நாளும்
இதுபோல்தான்.
நீ உரைத்த சென்ற சொற்களில்
நானுணர்ந்த விலகல்
இடியோடு கூடி இதயத்தை
கிழித்த மின்னலாக.
அன்று
விண்ணோடு
மட்டுமல்ல கண்ணோடும்
பெருமழை கண்டிருந்தது
என் வானம்.
இந்த மழை
மண்வாசத்தை
மட்டுமல்லாது அந்த நாளில்
ரண வாசத்தையும
் சேர்த்திறைத்து
பரப்பிக் கொண்டிருக்கிறது.
எத்தனை முயன்றும்
கட்டுபடு்த்த முடியாமல்
கண்ணீர் சொறிகிறது
கண்கள்.
இயலாமைகளின் பிடி
மேலும் மேலும்
இருக்க தாளாது
இந்த மழையின் முன்பு
மண்டியிட்டு
கைகளில் முகம் புதைத்து
கதறி அழுகிறேன்.
இங்கு
உள்ள பொருட்கள்
எவற்றிற்கும்
ஜீவன்இல்லாத
நிம்மதியில் இன்னும்
உரக்க கத்தி.....
அழுகையின் சத்தம்
குறைந்து
விசும்புதலுக்கு
மாறுகையில்
முதுகில் தட்டிக் கொடுத்து
ஆறுதல் சொல்கிறது
மென்தூறல்கள்.
உள்ளிருந்த
துயர்களையெல்யாம்
இந்த மழையில்
கரைத்தப்பின்
புதிதாய் ஜீவித்த
சிசு போல்
எப்பாரமுமற்று
தெளிந்த மனதுடன்
சாலையில் என் வழிப் பார்த்து
பயணிக்கிறேன்.
என்ன விந்தை...!
இந்த மழை ரணமாற்றவும் கற்றிருக்கிறதே.