புகை நமக்கு பகை
புகை நமக்கு பகை

1 min

22.7K
சுவாசக் காற்றில் சிறு நஞ்சையும் சேர்த்திழுத்து உள் நிறைத்து
சுகம் காண்கிறாய்
ஆசுவாசத்திற்கென நீ கையில்
எடுத்தால் அது சிறுக சிறுக
உனை அடிமையெனக் கொ(ல்லு)ள்ளும்.
மண்ணில் முளைத்தாலும் சரி
மனிதனில் முளைத்தாலும் சரி
புற்று பாலூற்ற வைத்துவிடும்.
நுரையீரலை கசக்கி பிழிந்தும்
காண்பித்தாயிற்று.
எப்போது திருந்துவாய்?