STORYMIRROR

Hemalatha P

Inspirational

4  

Hemalatha P

Inspirational

எண்ணம்

எண்ணம்

1 min
246

என் ஆசை அளவைத் தாண்டுகிறது

என் மனமோ அதை ஏற்க மறுக்கிறது

ஏன் இந்த நிலை எனக்கு?

இமைக்கும் நொடியில் ஆசை அடங்கிவிடுகிறது

இருந்தும் மீண்டும் மீண்டும்

என்னை ஏன் தூண்டுகிறது

இது ஆசையா?

இல்லை நான்

என்னை நம்புவோர்க்கு செய்யும் மோசடியா?

எனக்கு தெரியவில்லை?

இதை நிறுத்த மனம் துடிக்கிறது

இதை தெரிந்து சாத்தான்

என்னை இழுக்கிறது

இதில் என்னை நான் மீட்டெடுப்பேனா?

இல்லை இரையாவேனா?

கடவுள் என்னை சோதிக்கிறார்

மீண்டும் என்னை மன்னிக்கிறார்

அந்த வாய்ப்பை நான் நிந்திக்கிறேன்

அதை உணர்ந்து பின்

ஏன் என்று சிந்திக்கிறேன்

காலம் என்னை மாற்றுமா?

என் எண்ணம் மாறுமா?

மாற்றிக்கொள்ள துடிக்கிறேன்

அந்த மயக்கத்தில் இருந்து

எழுந்திட முயற்சிக்கிறேன்

மாற்றம் உண்டோ?

நான் கடவுளின் பிள்ளையாக

வழியும் உண்டோ?

மாற முயற்சிக்கிறேன் என்னை

கடவுள் மாற்ற முயற்சிக்கட்டும்

என் விதியை.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational