சூப்பர் ஹீரோ
சூப்பர் ஹீரோ
வேற்று கிரகத்தில்
இருந்து வந்து
அறிமுகம் ஆனவனோ
விசேஷ இயல்புகளால்
சாகசம் செய்பவனோ
சூப்பர் ஹீரோ அல்ல
சிறு வயதிலிருந்தே
தந்தையை பின்பற்றி
அவர் ஓய்வு பெற
தான் உழைத்து
உடன் பிறந்தவளை
கரை சேர்த்து
கரம் சேர்ந்தவளை
நெஞ்சில் சுமந்து
கஷ்டங்கள் அத்தனையும்
மறந்து தன் வாரிசுகளுடன்
நேரம் செலவிட்டு
அவர்களின் எதிர்காலத்திற்காக
தன் வலிகளை
தன்னோடு புதைத்துக்கொண்டு
தாயின் மடியில்
ஆறுதல் தேடும்
ஒவ்வொரு ஆணும்
சூப்பர் ஹீரோ தான்!!
