அவையடக்கம்
அவையடக்கம்
இனி என் வாழ்வின் பாதி அவள்
அம்மா சொன்னாள் தலையாட்டினேன்
இனி அவள் சொல்வாள் தலையாட்டுவேன்
முதல்நாள் அறிமுகம்
மறுநாள் நகர்வலம்
முகம் தெரியவில்லை
மனமும் தெரியவில்லை
மொழி தெரியவில்லை
பேசும்வழியும் தெரியவில்லை
வார்த்தைகள் மனதுக்குள்
ஆசைகள் விழிகளுக்குள்
நான் சிறைப்பட்டு விட்டேன் என்று
இந்த நாளும் சிறைப்பட்டு விடுமோ
தேடினால் வார்த்தைகள் கிடைப்பதில்லை
தேடாமல் மகிழ்ச்சி கிடைப்பதில்லை
ஆவலில் கழிந்தது பாதிநேரம்
தவிப்பில் கரைந்தது மீதிநேரம்
இரண்டு ஹலோவில்
முடிந்தது கடைசி நேரம்
அன்றும் பேசத் தெரியவில்லை
இன்றும் பேசத் தெரியவில்லை
அன்று தெரியாததால் பேசவில்லை
இன்று தெரிந்ததால் பேசவில்லை
'அவையடக்கம்!'