அம்மா......
அம்மா......
1 min
214
வலியின் வலியாய் என்னை
அறிமுகப் படுத்தினாய் இவ்வுலகில்!
துன்பத்தின் உருவாய் வாழ்ந்தாய்
என்னை உயர்த்த இம்மண்ணில்!
எவ்வித துயரமும் அணுகவிடாமல்
காத்தாய் என்னை இப்பூமியில்!
என் வெற்றிக்கு கடுமையாய் உழைத்தாய்
வேதனைகள் பல தாண்டி இவ்வாழ்வில்!
உயிரை மாய்க்கும் சோதனைகள்
எதிர் வந்தாலும் என் முகத்தைப் பதித்தாய் உன் நெஞ்சில்!
பருவவயதிலும் தாலாட்டி கொஞ்சி
முத்தமிட்டு உணவூட்டினாய் உன் அன்பில்!
தோழியின் முழுஉருவாய் நின்று
பயத்தையும் ஏற்படுத்தினாய் என் சிந்தனையில்!
அர்ப்பணித்தாய் உன் வாழ்வை எனக்காக
நான் வெற்றிபெற என் போராட்டத்தில்!
உன்முன் நான் அழ அறியேன் அழுதால்
வீணாகுமே உன் போராட்டம் இப்பிறப்பில்!
எனக்காக நீ சிந்திய
கண்ணீர் கோடிப்பல ஒருநாளில்!
அடைக்க இயலுமோ என்
பிறவிக் கடனை உன் பாதத்தில்!