Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.5  

anuradha nazeer

Classics

நாட்டுக்கு செய்யும் கடமை

நாட்டுக்கு செய்யும் கடமை

1 min
329


பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர் #கக்கன்...இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்#போலீஸ்#பொதுப்பணி#விவசாயம்#சிறுபாசனம்#கால்நடை_பராமரிப்பு#உள்துறை#சிறைத்துறை#நிதி#கல்வி#தொழிலாளர்_நலம்#மற்றும்#மதுவிலக்கு... 

கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை.


இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..

ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்... 


அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை... பேசாமல் ஒரு #துண்டை விரித்து பிளாட்பார பெஞ்சில் படுத்துவிட்டார்.. 

நடு இரவில் ரோந்து வந்த ரயில்வே போலிஸ்சார் யாரென்று தெரியாமல் லட்டியால் இரண்டு தட்டு தட்டி எழுப்பினர்... 

#யார்_நீங்கள் #எழுந்து_செல்லுங்கள்#இங்கெல்லாம்_படுக்கக்_கூடாது என்றனர்

அதற்கு அமைதியாக பதிலளித்தார்.. 


#அய்யா_என்_பெயர்_கக்கன்#நான்_போலீஸ் #மந்திரியாக_இருக்கேன்#அடுத்த_ரயில்_வந்தவுடன்_சென்றுவிடுகிறேன் என்றார், அதிர்ந்தனர் போலீஸ்காரர்கள்.


#அய்யா_மன்னித்துவிடுங்கள்_நீங்கள்_முதல்_வகுப்பு_ஓய்வறையில்_போய்_படுங்கள்.. என்றனர்.

வேண்டாம்.. இந்த வசதியே எனக்கு போதும் என்று அந்த பெஞ்சிலேயே படுத்து உறங்கிவிட்டார்... அவர் ரயில் ஏறும் வரை அங்கேயே போலீசார் நின்றிருந்து பத்திரமாக பார்த்துக் கொண்டனர்... 


இதை இன்னுமொரு செய்தியாக படித்துவிட்டு மறந்துவிட்டு போகாதீர்கள். இதை படித்த பிறகாவது கட்சி சார்பை துறந்து நேர்மையாணவர்களுக்கு ஓட்டக்களி உங்கள் மனதை மாற்ற முயற்சியுங்கள். மற்றும் கட்சி வெறி கொண்டு திருடர்களை ஆட்சியில் அமர்த்த ஓட்டளிக்கும் முட்டாள்களை திருத்தவும் பாடுபடுங்கள். இதுவே நீங்கள் நாட்டுக்கு செய்யும் கடமையாகும்.


Rate this content
Log in

Similar tamil story from Classics