Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

மதுரை முக்தீஸ்வரர் கோயில்

மதுரை முக்தீஸ்வரர் கோயில்

3 mins
220


மதுரையின் பஞ்சபூதத் தலங்களாக ஐந்து கோயில்களைக் குறிப்பிடுவது உண்டு. 

நீர்த் தலமாக செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், 

ஆகாயத் தலமாக சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்,

 நில தலமாக இம்மையிலும் நன்மை தருவார் கோயில்,

 நெருப்புத்தலமாக தெற்கு மாசிவீதி திருவாலவாயர் திருக்கோயில்

 மற்றும் காற்றுத்தலமாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலையும் குறிப்பிடுவதுண்டு.


மதுரை முக்தீஸ்வரர் கோயில்

இந்த உடலில் உயிர்க்காற்று அந்த ஆண்டவன் கருணையால் ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதியில் அந்தக் காற்று சேர வேண்டிய இடமும் அவன் திருவடிதான். அப்படி உயிர்களுக்கு முக்தியை அளித்துக் காக்கும் இறைவனை 'முக்தீஸ்வரர்' என்ற திருநாமம் கொண்டு அழைப்பது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு தலங்களில் முக்தீஸ்வரர் என்ற திருநாமத்தில் இறைவன் அருள்பாலிக்கிறார். அப்படி அவர் அழைக்கப்படும் அனைத்துத் தலங்களுமே ஆன்ம சாந்திக்காக வழிபாடு செய்யும் தலமாகவே திகழும். அப்படித்தான் மதுரை தெப்பக்குளத்தின் அருகில் இருக்கும் இந்தக் கோயிலும் கருதப்படுகிறது.


இனம்புரியாத பல்வேறு பிரச்னைகள் நம் வாழ்வில் நிகழும்போது அது தீர்க்கப்படாத பித்ருக் கடன்களாலேயே உண்டாகின்றன என்று சொல்வார்கள். பலர் அதற்காகப் பரிகாரம் செய்யப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று வணங்கி வழிபாடுகள் செய்வதும் உண்டு. அப்படி கர்மவினைகளால் துன்புறுபவர்கள் இந்த முக்தீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் உடனே நிவாரணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.


இந்தத் தலத்தின் விநாயகப் பெருமானுக்கு 'ஸித்தி விநாயகர்' என்பது திருநாமம். இங்குள்ள வில்வ மரத்தடியில் இந்த விநாயகப் பெருமான் அருள் செய்கிறார். வில்வ மரத்தைப் பிரதட்சிணம் செய்வதும் வணங்கிவழிபடுவதும் நமக்கு நற்பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். இங்கோ விநாயகப் பெருமானே அந்த மரத்தின் கீழ் அருள்பாலிப்பதால் அதன் சிறப்பு மிகவும் உயர்வாகப் போற்றப்படுகிறது. இந்த விநாயகரை வணங்கி வழிபட்டு வேண்டிக்கொண்டால் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதுடன் நம் விருப்பங்களும் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள். குறிப்பாக, நம் நீண்ட நாள் கனவு நனவாக இந்த விநாயகரை வேண்டி வணங்கினால் போதுமானது என்றும் சொல்கிறார்கள். இது இந்தத் தலத்தின் பிரார்த்தனைச் சிறப்பு என்றும் சொல்கிறார்கள்.


பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஈசனுக்கு 'ஶ்ரீமுக்தீஸ்வரர்' என்றும் அம்பாளுக்கு ஶ்ரீமரகதவல்லி என்றும் திருநாமங்கள். இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்று அம்பிகை, ஈசன் ஆகிய இருவரின் சந்நிதியையும் தரிசனம் செய்யலாம். எழில் கொஞ்சும் திருவடிவுடையாளாகத் திகழும் மரகதவல்லித் தாயாரை வேண்டிக்கொண்டால் செல்வ வளம் சிறக்கும் என்பது நம்பிக்கை.


இங்குள்ள நந்தி பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவராகப் போற்றப்படுகிறார். கொரானா காலத்துக்கு முன்புவரை இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் நந்தி பகவானுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெற்றுவந்தன. பக்தர்கள் அனைவரும் கூடி நந்தியிடம் தங்களின் பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பார்கள். சிலர் தங்கள் பிரச்னைகளைக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து அது தீர வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். ஒருவர் அதை சத்தமாக வாசித்து நந்தி தேவர் அந்த வேண்டுதல்களை நீக்குமாறு வேண்டுவார். உடனே அங்கிருக்கும் அனைவரும் அதை குறித்து நந்தியிடம் கூட்டுப்பிரார்த்தனை செய்வார்கள். இந்த வழிபாடு பலருக்கும் கைகொடுக்கும் வழிபாடாகத் திகழ்ந்தது. பலரும் தங்களின் வேண்டுதல் நிறைவேறப் பெற்றனர்.


இசையை அருளும் தட்சிணாமூர்த்தி

மேலும் இந்தத் தலத்தில் நடராஜப் பெருமான், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சுப்பிரமண்யர், துர்கை ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் கைகளில் வீணையை ஏந்தியபடி காட்சியருள்வதால் வீணை தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். பொதுவாகவே தட்சிணாமூர்த்தியை 'ஞானத்தின் கடவுள்' என்று போற்றுவோம். அவரை வணங்கி வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்களாம். இந்த தட்சிணாமூர்த்தி வீணை ஏந்தி இருப்பதால் இவரை வேண்டிக்கொண்டால் இசைக்கலையில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.



ஐராவதம் சாபம் தீர்ந்த தலம்

இந்தத் தலம் புராணச் சிறப்புப் பெற்ற தலம். துர்வாச முனிவர், தான் பூஜை செய்துபெற்ற மலர் மாலையை இந்திரனுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்ற இந்திரன் அலட்சியமாக அதைத் தன் வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தான். ஐராவதம் அதைக் கீழே போட்டுத் தன் காலால் மிதித்தது. இறை பிரசாதமான மாலையை அவமதித்த இந்திரனையும் ஐராவதத்தையும் துர்வாச முனி சாபமிட்டார். அதன் காரணமாக இந்திரன் தன் இந்திரப் பதவியை இழந்தான். ஐராவதம் பூவுலகில் காட்டு யானையாகப் பிறந்தது. நல்வினைகளால் தன் சாபத்தை அறிந்த ஐராவதம், வில்வக் காடாக இருந்த இந்தத் தலத்தில் இருந்த ஈசனை வணங்கிப் பூஜித்து வந்தது. அதன் வழிபாட்டால் மகிழ்ந்த ஈசன் ஐராவதத்துக்கு சாபவிமோசனம் தந்து முக்தி அளித்தார். முன்வினைப் பயன்களை நீக்கி முக்தி அளித்த ஈஸ்வரர் என்பதால் இவருக்கு முக்தீஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.


பல ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த மூர்த்தி என்றாலும் இதற்குத் திருப்பணி புரிந்தவர்கள் நாயக்க மன்னர்கள். குறிப்பாக முத்து வீரப்ப நாயக்கர் வழிபாடு செய்த ஈசன் என்பதால் முத்து ஈஸ்வரர் என்று அழைக்கப்பட்டு அதுவே முக்தீஸ்வரர் என்று ஆனதாகவும் சிலர் சொல்கிறார்கள்.


வைகை நதிக்கரை ஆலயங்கள் - 8 | கனவுகளை நனவாக்கும் வில்வ மரத்தடி விநாயகர்... முக்தி அருளும் ஈசன்!

சூரியன் வழிபடும் ஈசன்

ஈசனின் திருமேனி மீது சூரியக் கதிர்கள் படும் நிகழ்வு பல ஆலயங்களில் நிகழும். ஆனால் அவை குறிப்பிட்ட ஒரு சில நாளில் மட்டுமே விழுமாறு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ, ஒவ்வொரு மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அதாவது 10 ம் தேதி முதல் 21 தேதி வரையிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 19 முதல் 30 ம் தேதி வரையிலும் இந்த அற்புதம் நிகழும். மொத்தம் 24 நாள்கள் நடக்கும் இந்த அற்புத தரிசனத்தைக் கண்டால் நம் மனதின் பிணிகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் சூரிய பகவானே இங்கு முக்தீஸ்வரரைத் தன் கதிர்க் கரங்களால் தழுவி வழிபடுவதால் இந்த ஈசனை வணங்கினால் சூரியன் பலமில்லாத ஜாதகக் காரர்கள் சகல நன்மைகளையும் பெறமுடியும். மேலும் சூரியனே ஜாதக அடிப்படையில் ஆத்ம காரகன். அவன் பணிந்து கொள்ளும் இந்த முக்தீஸ்வரரை நாமும் பணிந்துகொண்டால் நம் வினைப்பயன்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் பக்தர்கள்.



Rate this content
Log in

Similar tamil story from Classics