Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics

4.6  

anuradha nazeer

Classics

சுவாமிமலை

சுவாமிமலை

1 min
177


அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு.சுவாமிமலை        கும்பகோணத்தில் உள்ள சப்தஸ்தானத்தில் இதுவும் ஒன்று மாசி மகம் முடிந்து ஆதி கும்பேஸ்வரர் பல்லக்கில் இங்கும் எழுந்தருளுவார்.   பெற்ற குழந்தைகளின் திறமையை கண்டு ஒரு தகப்பனாக சிவன் பூரிப்பு அடைந்த தலம் இது மட்டுமே.  (அறியாத வயதில் நாம் அறிந்த தமிழை நம் குழந்தைகள் அறியாத வயதில் அவர்கள் அறிந்து நமக்கு சொல்லும் போது நாம் பார்த்து கேட்டு ,கேட்டு சந்தோஷம் அடைவோம் அது போதாமல் நம் வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்களிடம் சொல்ல சொல்லி சொல்வதை கண்டு நாம் பூரிப்பு அடைகிறோம் )       தஞ்சை மாவட்டத்தில் மலைகளே இல்லாத போதும் தகப்பனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்கம் சொல்லும் போது குரு சிஷ்யனாக இருந்த காரணத்தால் சுவாமி நாதன் சன்னதி உயரத்திலும் சிவன் மீனாட்சி சுந்தரேஸ்வரராகவும் காட்சி தரும் வடிவில் கருங்கல் கொண்டு சோழர்கள் அமைந்த மாடக்கோவில்.


தலவிருட்சம் நெல்லி மரம் அன்னையின் சாபத்தால் பூமாதேவி சுவாமி மலைக்கு வந்து தவம் செய்தார் சாபவிமோசனம் கிடைத்தும் பூமாதேவி சுவாமி மலையை விட்டு போக மனமில்லாமல் நெல்லி மரமாக பள்ளிகொண்ட தலம்.    ராஜகோபுரம் தெற்கு நோக்கிய ஐந்து நிலை கோபுரம் .கிழக்கு வாசல் மொட்டை கோபுர வாசல் வழியில் தான் வல்லப கணபதி சன்னதி உள்ளது அதனால் பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக தான் வருவார்கள்.      பிரம்மாவின் 60 புதல்விகள் இங்கு படியாக காட்சி தருகிறார் ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பு அன்று இங்கு ஓவ்வொரு படியிலும் நடக்கும் படி பூஜை மிகவும் பிரபலமானது.        மூலவர் ஆறடி உயரத்தில் நின்ற கோலத்தில் தண்டம், வஜ்ஜிராயுதம் கொண்டு கிழக்கு நோக்கி ஊறு முத்திரையில் தங்க கவசம் வைரவேல் இரத்தினகிரீடம் தாங்கி காட்சி தருகிறார் மகாமண்டபத்தில் யானை வாகனம். 


சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டு இவற்றில் திருஏரகம் என்று சுவாமிமலையை குறிப்பிடுகிறார்கள். அருணகிரிநாதர் 38 திருப்புகழ் பாடல் பாடி உள்ளார்   சூரபத்மனை வதம் செய்யும் முன் இந்த தலத்திற்கு முருகன் வந்த போது 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு கூறுகிறது இதை வடிவில் விஸ்வரூபம் தரிசனம் தருகிறார்.        இந்த தலத்தில் கார்த்திகை தீபம் மிக பெரிய உற்சவம் ! தைப்பூசம் பங்குனி உத்திரம் வைகாசி விசாகம் நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.        விபூதி அபிஷேகம் நடக்கும் போது பழுத்த ஞானியாகவும் சந்தன அபிஷேகம் செய்யும் போது பாலமுருகனாகவும் மூலவரை கூர்ந்து கவனித்தால் சுவாமி நாதன் சிவலிங்க ஆவுடையார் மீது நிற்பது போலவும் சுவாமி நாதன் பாண லிங்கமாகவும் காட்சி தருவார்.


Rate this content
Log in

Similar tamil story from Classics