Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Classics Inspirational

4.5  

anuradha nazeer

Classics Inspirational

அனுபவ கடல்

அனுபவ கடல்

2 mins
228


அனுபவ கடல்


ஒரு கடற்கரை ஒரத்தில், சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனுடைய செருப்பை கடல் அலை இழுத்துச் சென்றுவிட்டது.

உடனே அந்த சிறுவன் கடற்கரையில் எழுதினான் *இந்த கடல் ஒரு மாபெரும் திருடன் என்று* .


வேறொருவர் மீன் பிடிக்க சென்றார், அன்று *நிறைய மீன்கள் அவருக்கு கிடைத்தது* ஆகவே அவர் எழுதினார், *கடல் மிக சிறந்த கொடையாளி* என்று.


கடலில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விட்டது .

தப்பித்த ஒருவர் *எழுதினார் இந்தக் கடல் இரக்கமற்றது என்று.*

முத்து எடுக்கப் சென்ற ஒருவருக்கு நிறைய முத்துக்கள் கிடைத்தன,

*அவர் எழுதினார் கடல் மாபெரும் பொக்கிஷம் என்று*.


கவலை தாங்காது கடலுக்கு வந்த, ஒருவருக்கு , *கடலலையும் அங்கு வீசிய தென்றலும் அவருக்கு மிகுந்த நிம்மதியை கொடுத்தன.*

அவர் உடனே கடற்கரையில் எழுதினார் *கடல் நிம்மதியை தரும் ஒரு சொர்க்கம் என்று.*


இப்பொழுது ஒரு பெரிய கடலலை வந்து , இவர்கள் அனைவரும் *எழுதிய வரிகளை மொத்தமாக உள்வாங்கி சென்று விட்டது.*


ஆக மாபெரும் வாழ்க்கை என்ற கடலில்

*இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் உலகை ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர் .*


நம்மிடம் பழகும் ஒவ்வொருவரும், *நம்மை ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.*


நம்மைப் பற்றிய அவர்களின் அபிப்ராயமும் உண்மையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

ஒருவருடைய சுபாவம், *விமர்சிக்கும் தன்மையுடன் இருந்தால், நாம் செய்வது சரியாக இருந்தாலும், அது தவறு என்று நம்மை விமர்சிக்க தொடங்கி விடுவார்கள் .*

ஒருவரின் சுபாவம் *ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் மனம் இருந்தால், நாம் செய்வது தவறே என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு நம்மை பாராட்டுவார்கள் .*


*அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தால், அவர்களின் கோணத்தில் இத்தகைய முடிவுகள் வருகின்றது .*

ஆகவே நம்மிடமும் எந்த தவறும் இல்லை அவர்களிடம் எந்த பிழையும் இல்லை.


கடல் போன்று ஆகி விடுவோம்.

நாம் கடல் ஆகிவிட்டால், *நம் மீது கற்கள் வீசப்பட்டால் ,அதை உள்வாங்கிக்கொள்ளலாம்.*


*புரிந்தும் புரியாத மாதிரி உள்ள உறவுகளிடம்... நாமும் தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்க பழகிக் கொள்ளலாம்*


*எல்லோரும் நீங்கள் உயர்வதை விரும்புவார்கள்.. ஆனால், அவர்களை விட அல்ல..* என்பதையும் புரிந்து, ஏற்றுக் கொள்ளலாம்.


கவலைகள் கடலளவு சூழுந்துள்ளது, அதில் நீங்கள் மூழ்கி விட்டீர்கள் என நீங்கள் எண்ணும் போது,

அஞ்சாதீர்கள், *நீங்களே கடல் என்னும் பொழுது எது உங்களை என்ன செய்யும் .*

மேலே கூறியது போல பொருளாதார மயக்கத்தில் பேசும் மற்றவரின் வெறும் வார்த்தைகளே அவை.

அனுபவ கடலாக மாறுங்கள்.

ஆகவே கடல் போன்று மற்றவருக்கு அனுபவங்களை கொடுங்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Classics