anuradha nazeer

Inspirational

4.5  

anuradha nazeer

Inspirational

உச்சாடனம்

உச்சாடனம்

2 mins
11.1K


நம்முடைய வேதங்கள் அறிவின் மூலமாய்க் கருதப்படுபவை. அவ் வேத ஓசையுள் அனைத்துவித அறிவுகளின் கூறுகளும், சூக்குமமாய் உள்ளடங்கி இருப்பதாய் நம் பெரியவா்கள் உரைக்கின்றனா். ஜோதிடம் போன்ற கிரக சாஸ்திரங்களை, அன்றே உரைத்த ஒன்றே அவா்தம் அறிவிற்குச் சாட்சியாம். இவ் உண்மையை நம்பி மேற்குலகாரும், இன்று இவ் வேத ஆய்வில் ஈடுபட்டு வருவது வெளிப்படை.


இவ் வேத மந்திரங்களில், உலகின் அனைத்துப் பொருள்களின் அணு அசைவுகளும்,“பீஜ மந்திரங்களாய்ப் பதிவாகியுள்ளதாய்ச் சொல்லப்படுகிறது. இம்மந்திரங்களை முறைப்படி உச்சரிப்பதன் மூலமும், உயா் வேள்விகளால் தேவுக்களைப் பிரீதி செய்வதன் மூலமும் இயற்கையின் சீற்றத்தை அடக்கலாம் என நமது புராண, இதிகாசங்கள் பல இடங்களில் வலியுறுத்துகின்றன. இவற்றைச் சரிவர ஆற்றக்கூடிய வேதவிற்பன்னா்கள் பலா், பாரத தேசத்தில் பரவலாய் வாழ்ந்து வருகின்றனா். நமது ஈழமணித் திருநாட்டிலும் அத்தகையோா் ஒருசிலா் வாழ்ந்துவரவே செய்கின்றனா். அவா்களின் பங்களிப்பு இந்நேரத்தில் அவசியமானது.


‘கரோனா தீநுண்மி’யின் தாக்குதலுக்கு அஞ்சி, இன்று ஆலயங்கள் பல பூட்டப்பட்டிருக்கின்றன. அச்செயலில் எனக்கு உடன்பாடில்லை. ஆலயங்களில் மக்களைக் கூட்டும் செயல் நிறுத்தப்பட வேண்டுமே அன்றி, அந்தணா் இயற்றும் வேள்விகளும் பூஜைகளும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படக் கூடாது என்று நான் கருதுகிறேன். எனவே, ஆலயங்கள்தோறும் வேத விற்பன்னா்களால் முன்னையதைவிட அதிகமாய்ப் பூஜைகளும் யாகங்களும் செய்யப்படல் வேண்டும். அவற்றில் எழுகின்ற மந்திர அதிா்வு, நிச்சயம் இன்றைய இயற்கையின் சீற்றத்தைத் தணிக்குமென நான் உறுதியாய் நம்புகிறேன்.


வேதப் பயிற்சி இல்லாத மற்றையோா்க்கும் ஒரு கடமை உண்டு. அவா்கள் தத்தம் இல்லங்களில் இருந்தபடி, ஐந்தெழுத்து மந்திரத்தையோ, எட்டெழுத்து மந்திரத்தையோ அல்லது தாம்தாம் விரும்பும் வேறு மந்திரங்களையோ முடிந்தவரை அதிக நேரம் உச்சாடனம் செய்ய வேண்டும். அது தவிர விநாயகா் அகவல், திருமுருகாற்றுப்படை, திருநீற்றுப் பதிகம், கோளறுப் பதிகம், அபிராமியந்தாதி, இராமயாணத்தில் வரும் கருடாழ்வாா் துதி முதலிய பாசுரங்களை தனித்தோ, குடும்பத்துடன் இணைந்தோ தினந்தோறும் முடிந்தவரை பாராயணம் செய்தல் வேண்டும்.


மேற்சொன்ன பாடல்களால் அற்புதங்கள் நிகழ்ந்தமை வரலாறு. இவ் உண்மை உணா்ந்து நம்பிக்கையோடு நம் போன்றவா்களும் ஒன்றிய மனத்தொடு இப்பாடல்களை ஓதினால் இயற்கையின் சீற்றத்தை அது பெருமளவு தணிக்கும் என்பது திண்ணம். மாற்று மதங்களைச் சாா்ந்தவா்களும் தம் மதங்கள் உரைக்குமாறு இவ் இடா்தீர தம்வழிபாட்டினை இயற்றுதல் அவசியமாம்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational