Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

துரத்தும் எண்ணங்கள் 3

துரத்தும் எண்ணங்கள் 3

1 min
322


எண்ணங்கள் மூன்று.

அள்ளி கொடுக்க கைகள் போதவில்லை.


அந்த பணக்கார மனிதருக்கு அந்த ஊரில் மட்டும் இரண்டு பள்ளிகள்.

இரண்டுமே தரமான பள்ளிகள்.நல்ல முறையில் சொல்லி கொடுக்க தேர்ந்த ஆசிரியர்கள் இருந்தார்கள்.

ஆகையால் இந்த பள்ளிகளில் படிக்க

நிறைய பணக்கார பையன்கள் போட்டா போட்டி.எவ்வளவு கட்டணம் சொன்னாலும் சேர்ந்து படிப்பார்கள்.

ஏழை மக்களும் தரமான கல்வி வேண்டி நிர்ணயம் செய்த கட்டணம் செலுத்தி வந்தனர்.இதே தரத்தில் இன்னும் பள்ளிகள் இருந்தன. சில இடங்களில் இதை விட கூடுதல் கட்டணம்.ஆனால் அந்த செல்வந்தர்,

ஒரு பள்ளியில் இலவசமாக கல்வி அளிக்க முன் வந்தார்.குறிப்பாக ஏழை குழந்தைகளுக்கு,சிறந்த மாணவர்களை பொறுக்கி எடுத்து

ஏழை மாணவர்களுக்கு உதவ நினைத்தார்.

அடுத்த கல்வி ஆண்டில் அதை அமல் படுத்தவும் செய்தார்.இதை பார்த்த மற்ற கல்வி நிறுவனங்கள்,தங்கள் பள்ளிக்கு ஆதரவு குறைவதை பார்த்து,இந்த இலவச கல்வியை நிறுத்த திட்டம் போட்டனர்.போது மக்கள் எதிர்க்கும் வகையில் சில செய்கைகளை செய்து அந்த பள்ளியின் செயல்பாட்டை நிறுத்தி விட்டனர்.ஏழை குழந்தைகள் பாதிக்க பட்டனர்.உதவ நினைத்தும் உதவ

முடியவில்லை.என்ன உலகம் இது


Rate this content
Log in

Similar tamil story from Fantasy