தர்மம் தலைகாக்கும்
தர்மம் தலைகாக்கும்


திண்டிவனத்தில் நான் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த போது எனக்கு கிடைத்த நண்பர்கள் மிகவும் ஏராளம். அதில் ஒருவர்தான்மல்லிகா என்ற பெண். மிகவும்ஏழ்மையான குடும்பம். அவரது கணவர் சோமு என் அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்தார்.
பகலெல்லாம் கடுமையான உழைப்பு. அவருக்கு இரவில் காவலாளி. என் அலுவலகத்தில் அவர் மனைவி மல்லிகா என்னிடம் வந்து உங்கள்அலுவலக வாசலில்நான் இட்லி கடை போடலாம் என்று இருக்கிறேன்.
எனக்கு உதவி செய்யுங்கள் மேடம் என்று கேட்டாள்.
பார்க்க பாவமாய் இருந்தது. சரி அம்மா இட்லி கடைக்கு தேவையான சாமான்கள் என்ன என்று ஒரு லிஸ்ட் தயார் செய்து தா என்று கேட்டேன். அந்த பண்டங்களை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அவளிடம் லிஸ்ட் கேட்டேன். அவளும் தேவையான சாமான்களை எழுதிக்கொடுத்தார். வாசலில் குடிசை போட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் எனக்கு ஒரு கல் வீடு கட்டித்தர வேண்டும் அம்மா .
இது புறம்போக்கு ஏரியா தான். பல வருடங்களாக குடிசையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அம்மா பெயரை சொல்வேன். கல்வீடு கட்டிக் கொடுத்தால் என்று கூறினாள். நானும் சரி என்று அதற்குண்டான பட்ஜெட் என்னவென்று கேட்டு அவளுக்கு உதவி செய்தேன். அவளுக்கு வீடு கட்டிக்கொடுத்து கிடைத்த நேரமோ என்னவோ தெரியவில்லை.
பிறகு நானும்அங்கிருந்து மாறி நாகப்பட்டினம் சென்றுவிட்டேன். இப்போது போன மாதம் திண்டிவனம்
சென்றிருந்தபோது அங்கு சென்று பார்த்தேன். இன்றும் அந்த கல் வீடு அப்படியே இருக்கிறது. அவளது இட்லி கடை மிக நன்றாக நடக்கிறது. வாசலிலேயே ஒருபெட்டி கடை போட்டு விட்டாள். நான் என் கணவர் காரில் சென்றோம்.
அம்மா என்று கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவளது குழந்தைகள் எல்லாம் என்று பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள். மனதுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. இன்று அவளது கணவன் சோமு உயிருடன் இல்லை.
ஆனாலும் நான் கொடுத்த இட்லிக்கடை, ,கட்டிக்கொடுத்த கல்வீடு அவள் மிக சந்தோஷமாக நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்க்க மட்டற்ற மகிழ்ச்சி எனக்கும் என் கணவருக்கும். தர்மம் தலைகாக்கும் என்பது புரிந்தது.