தொலைக்காட்சி
தொலைக்காட்சி


சென்னை தொலைக்காட்சியில் நான் பணி செய்து கொண்டிருக்கும் போது, ஒரு நாள் என் கணவர் நாளை உன்னை ஒரு இடத்திற்கு கூட்டி போகப்போகிறேன்.
அங்கு எக்கச்சக்க கூட்டம் இருக்கும். ஆண்களும் பெண்களும் கூட்டமாக குழுமி இருப்பர். பேசிக்கொண்டிருப்பார்கள்.
மிகவும் தீவிரமாக ,மும்முரமாக டிஸ்கஸ் செய்வார்கள்.
ஆனால் ஒரு சப்தம் வெளியே வராது என்றார்.
நான் குழம்பிப் போய் விட்டேன் .
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சத்தியமாக என்ன புரியுதா? என்று கேட்டார். உண்மையிலேயே ஒன்றுமே புரியவில்லை. இது உண்மை, இது சத்தியமாக நடந்த ஒன்று.
எனக்கு முன்னாள் நடிகை எம்பியுமானஎனக்கு முன்னாள் நடிகையும், எம்பியுமான ,டான்ஸர் வைஜயந்திமாலா பாலி அவர்கள் இருந்தார்கள்.
அவர் பதவி காலம் முடிந்த பின் என்னை ஒருமனதாக அனைவரும் போட்டியின்றி தேர்ந்து எடுத்தனர்.
நான் காத்து கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத
அசோசியேசனின் தலைவராக
பணியாற்றினேன்.
சென்னை சாந்தோம் சர்ச் பக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் வீட்டின் அருகே அடுத்த கட்டடம்.
காதுகேளாதோர் மிகப்பிரம்மாண்டமான பள்ளி உள்ளது.
அது தென்னகம் முழுமைக்குமான ஆளுகைக்கு உட்பட்டது.
நானும் என் கணவரும் சமூக சேவையாளர்கள்.
அது அனைவருக்கும் தெரியும் .
எனவே ஒருமனதாக என்னை காதுகேளாதோர் சங்கத்திற்கு தலைவராக நியமித்தனர்.
இரண்டு ஆண்டுகாலம் அதற்காக நான் பணி செய்தேன்.
அப்போது அவர்களது கஷ்டங்களை நாங்கள் கண்கூடாக பார்த்தோம்.
பார்வைத்திறன் குறைபாடு உள்ளவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இவர்களுக்கு எல்லாம் மனிதர்களின் இறக்கம்சுலபமாகக் கிடைத்துவிடும்.
ஆனால்பேச்சுத்திறன், கேட்கும் திறன் அற்றவர்களுக்கு அவ்வளவு இறக்கம் கிடைப்பதில்லை.
ஏனெனில் பார்வைக்குஅவர்கள் குறைபாடு தெரியாது.
எனவே இவர்களுக்கு பதிவு கிடைப்பது என்பது அரிது.
அவர்கள் இருக்கும் இடம் மிக அமைதியாக இருக்கும் .
செய்கையினால் மட்டுமே பேசுவார்கள்.
ஆனால் அது என்ன ஒருசுறுசுறுப்பான தன்மை உடையதாய் இருக்கும்.
குறையை வெளியே தெரியாத அளவுக்கு அவர்கள் நடந்து கொள்வார்கள்.
தோற்றத்திலும் சரிசெயல்பாடுகளில் சரி அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதே தெரியாது.