anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

தன் பங்களிப்பைக்

தன் பங்களிப்பைக்

6 mins
23.2K


பௌலர் டூ பௌலிங் பயிற்சியாளர்

இப்போ பயிற்சியாளரா பயணிக்கிறது எப்படி இருக்கு? பயிற்சியாளர் ஆகணும்னு எப்போ முடிவு பண்ணீங்க?


``ஒரு கட்டத்துல நம்ம அடுத்த பயணத்துக்குத் தயாராயிடணும். அதேசமயம் கிரிக்கெட்டுக்கு வெளியவும் ரொம்ப நாள் இருந்திட முடியாது. இப்போ டாக்டரா இருந்தா அவங்க கடைசி வரைக்கும் வொர்க் பண்ண முடியும். ஆனா எங்களுக்கு அப்படியில்ல. ஒரு 15 வருஷம் விளையாடலாம். 30, 40 வயசு ஆகுற வரைக்கும்தான விளையாட முடியும். Active phase அதோட முடிஞ்சிடும். அதுக்கு அப்றம் வேற வழில போய்த்தான் ஆகணும். கமென்டரா, காலம்னிஸ்டா, எடுகேஷனலிஸ்டா… இப்படி எதாவது ஒண்ணக் கையில எடுக்கணும். நமக்கு எந்த விஷயம் நல்லா வருதோ, அதைக் கையில எடுத்திடவேண்டியதுதான். இப்போ பயிற்சியாளரா இருக்கிறது ஒரு வித்யாசமான அனுபவமா இருக்கு. டீம்ல இருக்கோம். ஆனா, களத்துல இருக்க மாட்டோம். அதுவே வித்யாசமான அனுபவம். ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி பண்ணி அதை அணிக்குச் சொல்லணும். அனலிஸ்ட், மத்த கோச்சஸ்னு நிறைய பேர் கூட சேந்து வேலை செய்யணும். இந்த அனுபவம் நல்லா இருக்கு.


நான் பயிற்சியாளர் ஆனது ஒரு ஆக்சிடன்ட்னுதான் சொல்லணும். தமிழ்நாடு டீமுக்காக ஆடின கடைசி வருஷம், என்னோட ரோல் ரொம்ப வித்யாசமா இருந்துச்சு. அதனால பிளேயர் கம் கோச்சா இருக்க சம்மதிச்சேன். அப்போ இருந்த யங்ஸ்டர்ஸ்கு மென்டரா இருக்கணும். அதே சமயம், ஒருவேளை அணிக்குத் தேவைப்பட்டுச்சுனா பிளேயிங் லெவன்ல இறங்கணும். எதுக்கும் தயாரா இருக்கவேண்டிய சூழ்நிலை. ரெண்டு ரோல் பண்றதுக்கு ஓகே சொல்லிட்டேன். அப்றம் அப்டியே கோச் ஆயாச்சு. இப்போ ஹஸ்ஸி, ஃபிளெமிங் ரெண்டு பேர் கூடவும் வொர்க் பண்றது ஈசியா இருக்கு. ரெண்டு பேருமா என்கூட ஆடினவங்க. அவங்கனு இல்ல, இப்போ கோச்சா இருக்கவங்க நிறைய பேரு அப்டித்தான். முரளிதரன், கும்பிளே, லட்சுமண் அப்டினு கோச்சா இருக்க எல்லோருமே கூட அடினவங்க. அவங்க மட்டுமல்ல, ஜெயவர்தனே, மெக்கல்லம்னு எங்க ஏஜ் குரூப் அப்டியே இப்போ கோச்சிங்ல இருங்கிடுச்சு (சிரிக்கிறார்)."


இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு கம்பேக் கொடுத்த சி.எஸ்.கே, பல மாற்றங்களைக் கண்டிருந்தது. எப்போதுமே அனுபவ வீரர்களை விரும்பும் சி.எஸ்.கே நிர்வாகம், வாட்சன், ராயுடு, ஜாதவ், ஹர்பஜன், தாஹிர் என பல சீனியர்களை வாங்கியது. பேட்டிங், ஸ்பின் என இரண்டு ஏரியாக்கள் அப்படிப் பலமானதாக இருந்தாலும், ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் அப்படி இருக்கவில்லை. நிதினி, பொலிஞ்சர், ஹில்ஃபெனாஸ், நெஹ்ரா என எப்போதும் குறைந்தபட்சம் ஒரு அனுபவ ஃபாஸ்ட் பௌலராவது அணியில் இருப்பார். ஆனால், இந்த முறை அப்படி இல்லை. லுங்கி எங்கிடி, தீபக் சஹார், ஷர்துல் தாகூர், மோனு குமார் என எல்லோருமே இளைஞர்கள். அனுபவம் இல்லாதவர்கள். ஓரளவு அனுபவசாலிகளான மார்க் வுட் / டேவிட் வில்லி இருவரிடமிருந்தும் எந்தப் பங்களிப்பும் கிடைக்கவில்லை. சீசனுக்கு சீசன் தன் பெர்ஃபெக்‌ஷனை இழந்துகொண்டிருந்த பிராவோவைத் தவிர்த்து யாருக்கும் அனுபவம் இல்லை. அப்படியிருக்கையில் முழுக்க முழுக்க அந்த இளம் படையை வைத்து சமாளித்தது சூப்பர் கிங்ஸ்.

ஷர்துல் தாக்கூர் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் டாப் விக்கெட் டேக்கரானார். கடைசி கட்டதில் 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டினார் எங்கிடி. தீபக் சஹார் தன் பங்குக்கு 10 விக்கெட்டுகள் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல மிகமுக்கிய அங்கமாக விளங்கியது அந்த இளம் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட். அதை எப்படி தயார்படுத்தினார்கள்! அத்தனை அனுபவசாலிகளுக்கு மத்தியில் அவர்களுக்கு இணையாக இவர்கள் எப்படி செயல்பட்டார்கள்?! யாரும் அறியப்படாத தீபக் சஹார், இன்று இந்தியாவின் முக்கிய பௌலராக விளங்குவதன் காரணம் என்ன?! சூப்பர் கிங்ஸின் பௌலிங் கோச்சைவிட யாரால் இதற்குச் சரியான பதில் சொல்லிவிட முடியும்?!

2018-ல சூப்பர் கிங்ஸ் கம்பேக் கொடுக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. அப்படியிருக்கையில ஃபாஸ்ட் பௌலிங் டிபார்ட்மென்ட் ரொம்ப பலவீனமா இருந்துச்சு. எப்போமே ஒரு சீனியர் ஃபாஸ்ட் பௌலராவது இருப்பாங்க. ஆனா, இந்த முறை அப்படி இல்ல. பிராவோ மட்டும்தான் அனுபவமுள்ள வேகப்பந்துவீச்சாளர். ஆனா, எப்படி அப்படி ஒரு யூனிட்டை செயல்படுத்துனீங்க? அது எப்படி சாத்தியமாச்சு?


``கண்டிப்பா அதுக்கு சி.எஸ்.கே டீமோட லீடர்ஸ்தான் காரணம். லீடர்ஸ்னு நான் சொல்றது அணியோட நிர்வாகம், தோனி, ஃபிளெமிங்… அவங்களோட சேந்து எப்போமே அணியை நம்புற ரசிகர்கள். அவங்கதான் இந்த டீமோட தூண்கள். நாங்களெல்லாம் துணை நிக்கிற செங்கல் மாதிரி. 2 வருஷதுக்கு டீம் இல்ல. அதுக்கு அப்றம் ஒரு டீமைக் கட்டமைக்கணும். அப்படி வந்து உடனே கப் அடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய விஷயம். சும்மா ஏதோ நாக் அவுட் வரைக்கும் மட்டும் வரல. ஒரு பிரமாண்டமான ஃபினிஷ். சாம்பியன். சொல்லப்போனா எதுவுமே மாறல. விட்ட இடத்துல இருந்து ஆரம்பிச்சோம். களத்துலயும் சரி, வெளிலயும் சரி அந்த எனர்ஜி அப்டியே டபுளா இருந்துச்சு. அதை நினைக்கவே பிரமிப்பா இருக்கு.


நீங்க சொன்ன மாதிரி டீமோட ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் கொஞ்சம் சிக்கலைச் சந்திச்சுது. ஸ்பின்னர்ஸ் பயங்கர அனுபவசாலிகளா இருந்தாங்க. ஆனா, வேகப்பந்துவீச்சுல பிராவோ தவிர எல்லாருமே சின்னப் பசங்க. அதை வச்சு சமாளிச்சோம், நல்லா பெர்ஃபார்ம் பண்ணோம்னா அதுக்கு முக்கியமான காரணம் கேப்டன் தோனிதான். நீங்க என்ன கொடுத்தாலும் அதை workable resource-ஆ மாத்திடுவாரு. அந்த இடத்துல வேற கேப்டன் யாராவது இருந்தாங்கன்னா, அந்த யூனிட்டைப் பார்த்து குறை சொல்லத்தான் செய்வாங்க. ஆனா, தோனி அப்படிக் கிடையாது. சிஸ்டமை ரொம்ப நம்பிறவர். எந்த ஒரு சாதாரண கருவியையும் அட்டகாசமா மாத்தக்கூடியவர். இன்னைக்கு சூப்பர் கிங்ஸ் பிளேயர்ஸ்லாம் பாருங்க, இந்த டீமுக்கு வந்ததுக்கு அப்றம்தான் அவங்களோட graph மேல போயிருக்கும். ஜடேஜா இங்க வந்த அப்றம்தான் பெரிய ஸ்டார் ஆனாரு. பிராவோவுமே முன்னாடி இவ்ளோ பேமஸ் ஆகல. பெர்ஃபாமன்ஸ் கன்சிஸ்டன்டா இல்லாமதான் இருந்துச்சு. இங்க வந்தா எல்லாமே மாறிடும். சிஸ்டம் அப்படி. சி.எஸ்.கே அப்டின்ற அட்மாஸ்பியர் அப்படி. கோச்சிங் டீம் அப்படி. நான் 3 ஐபிஎல் டீம்கள்ல விளையாடியிருக்கேன். ஆனா, நம்ம எனர்ஜில ஒரு பாசிடிவான தாக்கம் ஏற்படுத்துறதுனா அது சி.எஸ்.கே-ல மட்டும்தான். அது ஒரு பெரிய பிராண்ட். நல்லா ஆவணப்படுத்தப்பட்ட பிராண்ட். இங்கே எல்லாமே சாத்தியம்தான்"


தீபக் சஹார்… நீங்க சொன்ன மாதிரி சூப்பர் கிங்ஸ்கு வந்தப்றம் பெரிய உயரத்தை அடைஞ்சிருக்காரு. ரெண்டு வருஷத்துல அவர் அடைஞ்சிருக்க முன்னேற்றம் அசாத்தியமானதா இருக்கு. ஃபீல்ட் செட் அப்புக்கு ஏத்த மாதிரி அவ்ளோ பெர்ஃபெக்டா பந்துவீசுறாரு. எப்படி சாத்தியமாச்சு. தீபக் சஹாரோட மேக்கிங் பத்தி சொல்லுங்க!


``சஹார், அட்டகாசமான திறமைசாலி. டீமுக்கு வர்ற பிளேயர்ஸ்ல ஒருசிலர Potential talent அப்டினு பாப்போம். சஹார் அப்டித்தான். அவரோட இந்த உயர்வுக்குக் காரணம்னா அது கண்டிப்பா தோனிதான். ஒரு பேட்ஸ்மேனோட செயல்பாட்டுல முன்னேற்றம் இருக்குனா அதுக்கு அந்த டீமோட கோச்சிங் ஸ்டாஃப்ஸ் காரணமா இருப்பாங்க. ஆனா, ஒரு பௌலர் இம்ப்ரூவ் ஆகறார்னா அதுக்கு நிச்சயமா கேப்டனோட தாக்கம்தான் காரணமா இருக்கும். அந்த வகையில சஹாரோட இந்த முன்னேற்றதுல தோனியோட தாக்கம் பெருசா இருக்கு. சூப்பர் கிங்ஸ்ல சேர்றதுக்கு முன்னாடி சஹாரை பெருசா யாருக்கும் தெரியாது. ஆனா, இப்போ நல்லா பாப்புலர் ஆயிருக்கார். ஸ்விங், சீம்னு ஒரு வேகப்பந்துவீச்சாளருக்குத் தேவையான அனைத்தும் அவர்கிட்ட இருக்கு. அதை தோனி சரியா கையாண்டார். சரியா ஊக்குவிச்சார். களத்துல ஒரு நல்ல வழிகாட்டுதல் இருக்கும்போது கண்டிப்பா முன்னேற்றம் இருக்கும். அதுதான் சஹார்கு நடந்திருக்கு."


பாலாஜி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார்

பர்சனால தோனியிடம் உங்களுக்குப் பிடிச்ச விஷயம்னா என்ன சொல்வீங்க?


``ரொம்பப் பெரிய இடத்துல இருக்கார். அவரோட பெருமைகளை அவராலயே நம்ப முடியாது. ரொம்ப அமைதியானவர். எப்பவும் பணிவாவே இருப்பார். அதேமாதிரி யதார்த்தமானவரும்கூட. எல்லாத்தையும்விட அவர் காட்டுற முதிர்ச்சிதான் அவ்ளோ அதிசயமா இருக்கும். எவ்ளோ வெற்றிகள், எவ்ளோ புகழ்… அத்தனைக்கும் தகுதியானவர் அவர். ஆனால், அது எதுவுமே அவரைப் பாதிக்கவில்லை. அது எதுவுமே அவரை முழுமையா திருப்திப்படுத்திடலை. எதுவுமே அவரை பாதிக்கல. இது எதுவுமே தன்னைப் பாதிக்காத வகையில விலகி இருக்கார். நான் என்ன பண்ணணுமோ அதைப் பண்றேன்’ அப்டினு ரொம்ப யதார்த்தமா சொல்வார். ஒரு ஐபிஎல் டீமோட கேப்டன், இந்தியன் நேஷனல் டீமோட கேப்டன்… 10 வருஷமா இந்தியன் டீமை லீட் பண்ணிருக்கார். ஒருசிலரால மட்டும்தான் அத்தனை விஷயங்களையும் கன்ட்ரோல் பண்ண முடியும். ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும். ஒரு கிரிக்கெட்டரா மட்டும் இல்லாம, ஒரு லீடரா, செல்வாக்கானவரா, ஒரு பிராண்டா வளர்ந்து நிக்கிறார். இத்தனை வருஷமா தொடர்ந்து கன்சிஸ்டன்டா ஆடிட்டு இருக்காரு. 2005-ல எப்படி சிக்ஸ் அடிச்சாரோ அதே மாதிரி இன்னமும் சிக்ஸ் அடிச்சிட்டு இருக்காரு. ஓர் ஓவருக்கு 15,16 ரன் வேணும்னா இப்பவும் தோனியைத்தான் நம்பறோம். அந்த அளவுக்கு ஒரு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார். எப்போமே அவரை பிரமிப்போடவும், மரியாதையோடவும் பாக்கறேன்".


தோனி பத்தி சொன்னீங்க. அதே மாதிரி இந்தியா கொண்டாடின இன்னொரு கேப்டன் கங்குலியோட கேப்டன்ஷிப்லயும் விளையாடிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?


``நான் பெரும்பாலான போட்டிகள்ல கங்குலியோட கேப்டன்ஷிப்லதான் விளையாடினேன். 2002 - 2005 வரைக்கும். அது ரொம்ப திறமையான, போராடுற டீம். அப்போதான் வெளிநாடுகள்ல ஜெயிக்கத் தொடங்குனோம். இந்திய கிரிக்கெட்டோட பெறுமையை மறுபடியும் நிலைநாட்டத் தொடங்கினோம். தாதாவோட தாக்கம் ரொம்ப ரொம்ப பெருசு. தோனி, கோலி டீமைக் கையில் எடுத்தது ஓரளவு நல்ல காலகட்டத்துல. ஆனா, கங்குலி கேப்டன் ஆனப்போ இருந்த சூழ்நிலையே வேற. இந்தியன் டீம் ஃபிக்சிங் பிரச்னைல சிக்கி சறுக்கிக்கிட்டு இருந்தப்போ அந்த டீமை லீட் பண்ணி மேல எடுத்திட்டு வந்திருக்கார். அது பெரிய விஷயம்.


அவரு ரொம்ப கால்குலேடிவான கேப்டன். எவ்ளோ பெரிய ரிஸ்கா இருந்தாலும் தைரியமா எடுக்கக்கூடியவர். அதைப்பத்திலாம் பெருசா அலட்டிக்கவும் மாட்டார். தன்னோட அதிகாரத்தை சரியா நிலைநாட்டியிருந்தார். எதைப் பத்தியும் கவலைப்படமாட்டார். தடுமாறிட்டு இருந்த ஒரு டீமை அப்டியே மாத்துறதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. இந்தியன் டீமுக்கு ஒரு கேரக்டர் கொடுத்தார். சேவாக், நெஹ்ரா, யுவ்ராஜ், ஜஹீர் கான், ஹர்பஜன் என எங்க ஜெனரேஷன் பிளேயர்ஸ் எல்லோருக்கும் பெரிய நம்பிக்கை கொடுத்தார். அவ்ளோ சிறிய இடைவெளில இந்தியன் டீம் ரீபௌண்ட் ஆனதுலாம் எவ்ளோ பெரிய விஷயம். கங்குலி, தோனி, கோலினு பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடிய கேப்டன்கள் ஒவ்வொரு தலைமுறைலயும் கிடைக்கிறதுங்கறது இந்தியன் டீமுக்குக் கிடைச்ச பெரிய அதிர்ஷ்டம்".


உங்க சிரிப்போட ரகசியம் சொல்லுங்க. `ஸ்மைலிங் அசாஸின்’ அப்டினு பட்டம்லாம் கொடுத்திருக்காங்கள்ல?


(சிரித்துக்கொண்டே) ``ஆமா, எல்லோருக்குமே அது பிடிச்சிருக்கு. அதுல ரகசியம்னுலாம் ஏதும் இல்ல. பல்லு தெரியுறதுலாம் சிரிப்பில்லையே! (மீண்டும் சிரிக்கிறார்). என் உடல் அமைப்பு அப்படி. நம்ம சிரிப்ப நாமளே பாக்க முடியாது. மத்தவங்கதான் பாத்துச் சொல்லணும். அதுக்காக கண்ணாடி முன்னாடி நிண்ணு சிரிச்சுலாம் பார்த்தது இல்ல. எனக்குப் பிடிச்ச எமோஷன் அது. அதை எனக்குப் பிடிச்ச மாதிரி அப்படியே வெளிப்படுத்தறேன். அவ்ளோதான். அது மத்தவங்களுக்குப் பிடிச்சிருக்குன்றது சந்தோஷமா இருக்கு."


கடைசி வரை சிரித்துக்கொண்டேதான் பதில் சொன்னார் பாலாஜி. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லத் தயங்கவில்லை. தன் கம்பேக் பற்றிப் பேசியபோது, பொதுப்படையாகத்தான் பேசினார். சி.எஸ்.கே வேகப்பந்துவீச்சைப் பற்றி, சஹாரைப் பற்றிப் பேசும்போது, தோனியை கைகாட்டுகிறார். கிரிக்கெட் வாழ்க்கையின் பசுமையான நினைவெது எனக் கேட்டால், கிரிக்கெட்டுக்காக போராடிய நாள்களைச் சொல்கிறார். ஆனால், ஸ்விங், ஸ்லோ பால், பௌன்ஸ் எனத் தன் வேரியேஷன்களால் சில அட்டகாசமான ஸ்பெல்களை வீசியிருக்கிறார். இப்போது சஹார், ஷர்துல் போன்ற இளம் பௌலர்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாய் விளங்குகிறார். லட்சுமதி பாலாஜி, அவர் சொன்னதுபோல் இன்னும் Utility பிளேயராகத்தான் இருக்கிறார். ஆனால், இந்திய கிரிக்கெட்டுக்குத் தன் பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்!


Rate this content
Log in

Similar tamil story from Inspirational