தாத்தா பாட்டி
தாத்தா பாட்டி


அப்போதெல்லாம் கிராமத்து வீட்டுத் திண்ணையில காலை நீட்டிக்கிட்டு தாத்தாவோ பாட்டியோ உட்கார்ந்து பழைய கதைகள் பேசிக்கிட்டிருப்பாங்க. அவங்க ஒண்ணும் தண்டமா இல்ல. அவங்கதான் அந்த வீட்டுக்கு செக்யூரிட்டி. அவங்கதான் அந்த வீட்டுக்கு நியூஸ் ஏஜென்சி. எல்லாக் காலத்துலயும் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, பதினாறு டு இருபத்தி நாலு டர்ட்டி ஏஜ். அதைக் கடந்துதான் வந்தாகணும். அவங்க எங்க போறாங்க, என்ன பண்றாங்கனு கவனிச்சுக்கிறதே இந்தத் தாத்தா பாட்டிங்கதான். அவங்கதான் அந்த வீட்டையே நெறிப்படுத்துவாங்க. அந்தக் கண்காணிப்பு இப்போ இல்ல. அதனால பல குடும்பங்கள்ல அமைதி இல்ல. அந்தத் தாத்தா பாட்டியெல்லாம் இப்போ ஓல்ட் ஏஜ் ஹோம்ல இருக்காங்க."
குடும்பத்தில் கண்காணிப்பு இல்லை. படிப்பு படிப்பு என்று பெண் குழந்தைகளும் ஆண் பிள்ளைகளும் சுற்றி திரிகிறார்கள்.
கண் காணித்து சொல்ல யாருமில்லை. அவரவர்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அந்தக் காலத்து பாட்டி தாத்தாவின் அருமை இப்போதுதான் புரிகிறது.