ஸ்பெஷல் எஜுகேஷன்
ஸ்பெஷல் எஜுகேஷன்


காதலிலே தனித்துவம்!
பார்க்காத காதல், பழகாத காதல் என வித்தியாசமான காதல் கதைகளிலிருந்து தனித்துவமானது மிரண்டா - ரெக்ஸியின் காதல். பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் இல்லாத மிரண்டா, தனக்கிருக்கும் சவால்களையெல்லாம் மீறி, திறமையால் சாதித்தவர். தன் குடும்பத்தையும் வசதியான வாழ்க்கையையும் உதறிவிட்டு, மிரண்டாவைக் கரம்பிடித்திருக்கிறார் ரெக்ஸி. காதல் இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது.
நம் வருகையை அமெரிக்கன் சைகை மொழியில் மிரண்டாவிடம் தெரிவித்தார் ரெக்ஸி. கைகுலுக்கி என்னை வரவேற்ற மிரண்டா, நிதானமாகப் பேசத் தொடங்கினார்.
"சின்னவயசுல ஓரளவுக்குத்தான் எனக்குச் செவித்திறன் இருந்துச்சு. பலரும் என்னைப் பார்வையற்றவனாக நினைச்சாங்களே தவிர, என் செவித்திறன் பிரச்னையை யாருமே புரிஞ்சுக்கலை. நான் படிக்கிறதுக்கான சிறப்பு வசதிகளும், ஆசிரியர்களும் எந்த ஸ்கூல்லயும் இல்லை...
...கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி தகுதித் தேர்வுக்குத் தயாரானேன். என்னைப் போன்ற செவித்திறன் இல்லாதவங்களுக்குத் தனிக் கேள்வித்தாள் தயாரிக்க வாய்ப்பில்லைன்னு தேர்வுக்குழு சொல்லிட்டாங்க. சென்னை உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தேன். மூணு வருஷ போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கிடைச்சுது. அந்தத் தேர்வுல எனக்குக் கொடுக்கப்பட்ட பிரெய்லி கேள்வித்தாள்ல நிறைய தவறுகள். மீண்டும் நீதிமன்றத்துல முறையிட்டேன். 2013-ம் ஆண்டு சாதகமான தீர்ப்பு கிடைச்சுது. அந்தத் தேர்வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் நான்தான். ஆனா, இந்த விஷயம் இதுவரை யாருக்குமே தெரியாது.
சென்னை நிப்மெட் கல்லூரியில கெளரவ விரிவுரையாளரா ஒரு வருஷம் வேலை செஞ்சேன். பிறகு, கல்லூரியின் புதிய இயக்குநரா பொறுப்பேற்றவர், 'நீங்க மேற்கொண்டு இங்க வேலை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கான கோர்ஸ் ஏதாவது படிக்கணும்னு உறுதியா சொல்லிட்டார். அதுக்காக பி.எட் (ஸ்பெஷல் எஜுகேஷன்) படிச்சேன். அப்போதான் ரெக்ஸி என் வாழ்க்கைக்குள்ள வந்தார்" - மிரண்டாவின் முகத்தில் வெட்கம் படர்கிறது. ரெக்ஸி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார்.