புதுமைப்பெண்
புதுமைப்பெண்


ஏழை விவசாயின் குழந்தை சாரதா. அம்மா பெயர் வாசுகி. அப்பா பெயர் சுப்பன். சாரதா ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். அவள் படித்த முனிசிபல் பள்ளியின்பின்புறம் ஒரு குளம் ஆகாயத்தாமரை, காரணிகளால் சூழ்ந்து அழுகிய செடியின் மூலம் நாற்றம் பெருக்கெடுத்து சுற்றுப்புற சூழ்நிலையை பாதித்துக் கொண்டு இருந்தது. இதனை சுத்தம் செய்வார் யாருமே இல்லை. அப்படி இருக்கும்போதுவாசுகி இடம் அடிக்கடி சண்டை போடுவார் சுப்பன்.
இதனால் கடந்த ஆறு மாதமாக தன் தந்தையிடம் பேசாமல் கோபமாய் இருந்தாள் குழந்தை சாரதா. சாரதாவின் தந்தையும் பலமுறை கெஞ்சி கேட்டும
் ஒரே மகள் பேசாததால் வருத்தமுற்றார். என்ன செய்தால் நீ பேசுவாய் சாரதா என்று அப்பா அன்பொழுக கேட்டபோது என் பள்ளியின் பின்னால் உள்ள அசுத்தமான குளத்தை அழுகிய காட்டாமணி செடிகளையும் ஆகாயத்தாமரை நீக்கி சுத்தப் படுத்தினால் உங்களுடன் பேசுகிறேன் என்றாள்.
மறுநாள் முதல்ஒரு வார காலம் அந்த குளத்தை சுத்தப்படுத்தி முடித்தார். அதை கண்ட சாரதா மகிழ்ச்சியின் மிகுதியால் தந்தையுடன் பேசினாள். பிறகு தந்தையிடம் இனி தன் தாயிடம் சண்டை போட மாட்டேன் என்று வாக்குறுதியும் பெற்றாள். பெண்ணென்றால் இவளல்லவோ பாரதி கண்ட புதுமைப்பெண்..