படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து உதவி
படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து உதவி


என் கடைக்கு வருகிற மக்கள் மிகச் சாதாரண அடித்தட்டு மக்கள். அவர்கள் ஊரடங்கால் வேலைக்கு போக முடியாமல் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டனர். அதைப்பார்த்து என் மகள், அவள் படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து உதவி செய்யுங்கள், படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னாள்.
நானும், என் மனைவியும் தயங்கினோம். அவள் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் அடம்பிடித்தாள்.ஒரு சின்னப் பெண்ணுக்கு இருக்கிற மனிதநேயம் எங்கள் மனதை கரைத்தது. உடனே நாங்கள் அந்தப் பணத்தை எடுத்து வந்து மகள் விருப்பப்படியே அந்த கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவினோம். பிரதமரின் இந்தப் பாராட்டு நியாயப்படி என் மகளைதான் சாரும்.இந்த சாமாணியன் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டிற்திற்காக பிரதமர் மோடிக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது தமிழகத்திற்கும், மதுரை மண்ணுக்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
கஷ்டப்டுகிற மக்களுக்கு இதுபோல் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய என் மகள் நேத்ரா ஐஏஎஸ் படித்து கலெக்டராக ஆசைப்படுகிறார். அவள் ஆசைப்படி படிக்க வைக்க முடிவு செய்துள்ளேன். அதற்கு அவளை எப்படியாக பிரதமரிடம் அழைத்துச் சென்று அவரிடம் அவள் ஆசி பெற என்று ஆசை. அது நடக்குமா? என்று தெரியவில்லை, ’’ என்றார்.நேத்ரா கூறுகையில், ‘‘அப்பா ஒரளவு சம்பாதித்த பணத்தில் எங்களுக்கு சாப்பாட்டிற்கு கஷ்டமில்லை. ஆனால், எங்களைச் சுற்றியுள்ள மக்கள் வீடு தேடி வந்து சாப்பாட்டிற்கே வழியில்லை என்று வாய்விட்டு சொன்னார்கள்.
அப்பாவிடம் அவங்களுக்கு முடிந்தளவு உதவியை செய்யுங்கள் என்றேன்.மிகச் சாதாரணமாக அந்த உதவியை செய்தோம். ஆனால், நாங்கள் செய்த இந்த உதவியால் கிடைத்த பாராட்டுகளை பார்க்கும்போது வாழ்நாள் முழுவதும் இதுபோன்ற சேவையை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது, ’’ என்றார்.கடந்த 2 ஆண்டிற்கு முன் இதே ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுயமாக தொழில் செய்து முன்னேற்றமடைந்ததை பாராட்டியதோடு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பூமி பூஜை விழாவுக்கு வந்தபோது அந்தப் பெண்ணை நேரடியாக அழைத்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதபோல், பிரதமர் மோடி தமிழகம் வந்தால் சலூன்கடைக்காரரையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்துப் பாராட்ட வாய்ப்புள்ளது.