anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

போய் புகார் கொடு

போய் புகார் கொடு

2 mins
22.9K


எங்க வேணாலும் போய் புகார் கொடு!' - ஒன்றிய கவுன்சிலருக்கு ரேஷன் கடை பெண் ஊழியரால் நேர்ந்த அதிர்ச்சி

ரேஷன் அரிசி மூட்டைகளைக் கட்டடத்துக்கு வெளியில் உள்ள மண்ணில் போட்டு வைத்து, மண்ணோடு சேர்த்து அரிசியை வழங்கி வருவதாக அங்குள்ள மக்கள் புகார் சொல்லியிருக்கிறார்கள்.


ரேஷன் அரிசி மூட்டைகளை மண்ணில் போட்டு வைத்திருந்ததைக் கண்டித்த மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலரை, ரேஷன் கடை ஊழியர் ஒருமையில் பேசி திட்டிய விவகாரம் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறது. இதுசம்பந்தமாக, அவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்க, அந்த ரேஷன் கடை ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மாவத்தூர் ஊராட்சியில் இருக்கும் கிராமம், ரெட்டியப்பட்டி. இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்கள் பலரும், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள். கூலி வேலைக்குப் போய், அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருபவர்கள்.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், இந்த மக்கள் வேலைக்குப் போக முடியாத சூழலில் உள்ளனர். இந்த நிலையில், இவர்களுக்கு ரேஷன் அரிசியும் ரேஷன் பொருள்களும்தான் ஊரடங்கு நாள்களைப் பசியின்றிக் கடக்க உதவி வருகிறது.இந்தநிலையில், இந்தக் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், ரேஷன் அரிசி மூட்டைகளைக் கட்டடத்துக்கு வெளியில் உள்ள மண்ணில் போட்டு வைத்து, மண்ணோடு சேர்த்து அரிசியை வழங்கி வருவதாக அங்குள்ள மக்கள் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தியும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கப் போயிருக்கிறார். அப்போது, அங்கு பொருள்கள் வாங்க காத்திருந்த மக்கள், ரேஷன் அரிசி மூட்டைகள் மண்ணில் கிடப்பதைப் பற்றி குமுறலோடு கூறியுள்ளனர். உடனே ராமமூர்த்தி, அதுபற்றி மாவத்தூர் ரேஷன் கடையில் பொருள்களை வழங்கும் ஊழியர் மேனகாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.


அதன் பிறகு நடந்தவற்றை, நம்மிடம் விவரித்த ராமமூர்த்தி, "ரேஷன் அரிசி மூட்டைகளை மண்ணில் போட்டு வைத்திருந்தார்கள். அந்த மூட்டைகளில் பல இடங்களில் ஓட்டைகள் வேறு. இதனால், மூட்டைகளில் இருந்து அரிசி மண்ணில் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்து கோபப்பட்ட நான், ஊழியர் மேனகாவிடம் கேள்வி கேட்டேன். 'அரசு அறிவித்த இலவச அரிசி மூட்டைகளை ரேஷன் கடையில் பாதுகாப்பாக வைக்காமல், மண் தரையில் வைத்து, அரிசியும் மணலும் ஒன்றாகக் கலந்து கிடக்கிறது. இந்த அரிசிக்காக, மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், இப்படி இந்த மண்ணில் கலந்துகிடக்கும் அரிசியை மக்கள் எப்படி உணவு சமைத்து சாப்பிடுவார்கள்?' என்று கேட்டேன்.


ஒன்றிய கவுன்சிலர் என்ற முறையிலும் நானும் மக்களும் இணைந்து கேட்டபோது, மேனகா ரொம்ப அலட்சியமாகப் பதில் சொன்னார். 'அப்படித்தான் அரசி மண்ணில் கிடக்கும். எப்போதும் இப்படித்தான் போட்டு வைத்திருப்போம். இப்போ புதுசா நீ கேட்க வந்துட்டியா? தேவைப்பட்டால் அரிசியை வாங்கு, இல்லை என்றால், வாலைச் சுருட்டுப் போ' என்று ஆணவமாகப் பேசினார்.உடனே நான், 'இப்படி பொறுப்பில்லாம பேசினா, மேல் அதிகாரிகளிடம் புகார் சொல்லுவேன்'னு சொன்னேன். அதுக்கு மேனகா, 'நீ சி.எம்கிட்ட வேண்டுமானாலும் புகார் பண்ணிக்க'னு நக்கலா பேசினார். உடனே, நான் ரேஷன் அரிசி மூட்டைகள் மண்ணில் கிடக்கும் அவலத்தைப் போட்டோ எடுத்து, மேனகாவின் பொறுப்பற்ற பதிலையும் இணைத்து, மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு புகார் அனுப்பினேன். உடனே அவர், அதிகாரிகளை முடுக்கிவிட்டு, மேனகாவை சஸ்பெண்டு பண்ண வச்சுட்டார்.


ரேஷன் அரிசியை வாங்கும் மக்களை ஏதோ பிச்சைக்காரர்களை நடத்துபவர்கள் போல் ஊழியர்கள் நடத்துகிறார்கள். ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட அதிகாரிகளே பொறுப்பில்லாமல்தான் பேசுறாங்க.


சில வாரங்களுக்கு முன்பு கரூர் ராயனூர் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் அரிசி ஸ்டாக் இல்லாததைத் தட்டிக்கேட்ட சந்திரசேகர் என்பவரை, 'பொறுக்கி, போனை வைடா' என்று மாவட்ட வழங்கல் அதிகாரி போனில் திட்டினார். அதோடு, சந்திரசேகர் மீது வழக்கும் பதியப்பட்டது. இப்படி ரேஷன் கடைகளில் கடிவாளம் இல்லாமல் பிரச்னைகள் இருக்கு. இதைக் களைவது யார் என்றுதான் தெரியவில்லை" என்றார் வேதனையோடு.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational