anuradha nazeer

Inspirational

4  

anuradha nazeer

Inspirational

"பீஷ்ம விரதம் part 6"

"பீஷ்ம விரதம் part 6"

3 mins
8


ஜாத்காரு என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவர் ப்ரம்மச்சாரி. ஒருநாள் வனத்தில் செல்லும் போது அவருடைய பிதுர்க்கள் ஒரு கிணற்றில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். பித்ருக்கள் "எங்கள் நிலையைப் பார்த்தாயா? நீ விவாஹம் செய்து நல்ல புத்திரனைப் பெற்றால் தான் நாங்கள் ஸ்வர்கம் செல்லமுடியும்" என்றார்கள். எனக்கு வருபவள் என் பெயரை உடையவளாகவும், என் மனப்படி நடப்பவளாகவும், என்னால் தேடப்படாதவளாகவும் இருந்தால் மணந்து கொள்வேன் என்றார் ஜாத்காரு மஹரிஷி.   இது இப்படி இருக்க ஒரு நாள் காசிப மஹரிஷியின் பத்னிகளான கத்துரு, வினதை இவர்கள் சூரியனின் குதிரையின் நிறம் என்ன என்று சர்ச்சை செய்ய, விநதை அது வெண்மை நிறம் என்றாள்.


அவள் கத்துருவிடம் நீ இந்தக் குதிரையின் நிறம் என்ன என்று சொல்?அது வெண்மையாக இல்லை என்றால் நான் உனக்கு அடிமை என்றாள். நீ எனக்கு வேலைக்காரியாகத்தான் ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டு, கத்துரு தன் மகன்களான சர்பங்களை அழைத்து, சூரியனின் குதிரையை விஷ ஜ்வாலையால் கறுப்பாக்குங்கள் என்றாள். சில சர்பங்கள் மறுத்தன. உடனே அவள் நீங்கள் ஜனமேஜயன் செய்யப் போகிற யாகத்தில் வீழ்ந்து இறக்கக் கடவது என சபித்தாள். மற்ற சர்பங்கள் தாய் சொல்லைத் தட்டக் கூடாது என்று, ஆகாயத்தில் சென்று குதிரையின் வாலை சுற்றிக் கொண்டு, அதை கறுப்பு நிறம் போல் தோன்றச் செய்தது. கத்துரு வினதையைப் பார்த்து நீ வெண்மை நிறம் என்று சொன்னாயே, அது கறுப்பாகவல்லவா இருக்கிறது? என்று சொல்ல, வினதையும் கறுப்பு நிறமான குதிரையைப் பார்த்துவிட்டு தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள்.


கத்துரு வினதயை சிறையில் அடைத்தாள். வினதை சிறையில் கஷ்டப்படுவதை அறிந்த அவளது மகன் கருடன் "தாயே நீங்கள் கவலையை விடுங்கள். நான் இருக்கிறேன்." என்றான். வினதை சொன்னாள் மகனே! நான் உன் பெரிய தாயின் அடிமை. அவளை நான் இப்போது அவள் சொல்லும் இடம் தூக்கிச் செல்லவேண்டும் இதுவே என் கவலை" என்றாள். நான் இருக்க கவலை ஏன்? என்று இருவரும் கத்துருவைப் பார்க்கச் சென்றனர். கருடன் "தாயே! உங்களை நான் தூக்கிச் செல்கிறேன் " என்று சொல்ல ஸர்பங்களும், கத்துருவும் அதன் மீது ஏறி அரைக் கணத்தில் கடற்கரைச் சென்றனர். கத்துரு மகிழ்ந்தாள். சமயம் பார்த்து கருடன் என் தாய் விடுதலை அடைய என்ன செய்ய வேண்டும்? என்றான். இந்திரலோகம் சென்று அமிர்த கலசத்தைக் கொண்டுவா என்றாள்.


கருடனும் இதோ அமிர்த கலசம் என்று தர்பயைப் பரப்பி அதன் மீது கலசத்தை வைத்துவிட்டுத் தன் தாயை மீட்டுக் கொண்டு போய்விட்டான். ஸ்நானம் செய்த பின் அமிர்தம் அருந்தலாம் என்று சர்பங்கள் குளிக்கச் சென்றன. அந்த சமயம் இந்திரன் கலசத்தை எடுத்துச் சென்று விட்டான். சிதறி இருந்த அமிர்தத்தை சர்பங்கள் ருசிக்க, அவைகளின் நாக்கு இரண்டாகப் பிளந்தது. அந்த நேரத்தில் சாபம் கொண்ட வாசுகியும் மற்ற சர்பங்களும் ப்ரம்மனிடம் சரண் அடந்ததார்கள். அவர் வாசுகியின் தங்கையை ஜரத்காரு என்னும் மஹரிஷிக்குக் கல்யாணம் செய்து வையுங்கள், அவர்களுக்கு ஆஸ்திகன் என்னும் மகன் பிறப்பான். அவனால் உங்கள் மரண பயம் நீங்கும் என்று சொன்னார். அதன்படி வாசுகி ஜரத்காருவிற்குத் தங்கையைக் கல்யாணம் செய்து கொடுத்தார். அவர் சொன்னார் அவள் எனக்கு விருப்பம் இல்லாததை எப்பொழுது செய்கிறாளோ அப்பொழுது நான் அவளைப் பிரிவேன் என்றார். ஒரு நாள் நான் இப்பொழுது தூங்கப் போகிறேன்.


என்னை எந்த காரணத்திற்காகவும் எழுப்பாதே என்றார். மாலை வந்தது. சந்த்யாவந்தனம் செய்ய வேண்டுமே? அது தர்மம் ஆயிற்றே என்று அவரை எழுப்பினாள். மஹரிஷி கோபம் கொண்டு சொல்லை மீறி விட்டாய். நான் போகிறேன். நீ உன் தமயனிடம் போ! என்றார். அவள் சொன்னாள் நமக்கு இன்னும் சந்தான பாக்யம் கிடைக்கவில்லையே? என்றாள். அவர் "அஸ்து" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இவள் வாசுகியிடம் மீண்டும் போனாள். பத்தாவது மாதம் குழந்தை பெற்றாள். தந்தை "அஸ்து" என்றதால் ஆஸ்திகர் எனப் பெயர் கொண்டார். இவரின் தாய் சர்பத்தின் வம்ஸம் அல்லவா?அதனால் ஸர்பங்களைக் யாகத்தில் விழுந்து இறக்காமல் காப்பாற்றினார்.


சில ஸர்பங்கள் யாகத்தில் இறந்ததற்கு அவைகளின் அன்னையான கத்துருவின் சாபமே காரணம். சில ஸர்பங்கள் பிழைத்ததற்குக் காரணம் ப்ரம்மாவின் அனுக்ரஹமே. அதனால் ஆஸ்திகரிடம் உனக்குக் கோபம் வேண்டாம் . அவரை பூஜிப்பாய் உனக்கு நன்மை உண்டாகும் என்றார். நீ பல புண்ணிய கர்மங்களும் தானம் ,தர்மங்கள் செய்தும் உன் தந்தை ஸ்வர்கம் அடையவில்லை. அதனால் தேவிக்கு கோவில் கட்டி ஆராதனைகள் செய்தால் சகல சம்பத்தும் கிடைக்கும். தேவி பாகவதம் கேட்பது யாகம் செய்யும் பலனைத்தரும். மனதில் தேவியை நினைப்பவன் பாக்யவான் ஆவான். சகல தேவர்களும் தேவியை ஆராதிக்கின்றனர். இது தேவியினால் விஷ்ணுவிற்கு உபதேசிக்கப் பட்டது. இதைப் படிப்பவரும் கேட்பவரும் எல்லா நன்மைகளும் அடைவார்கள். பித்ருக்களும் ஸ்வர்கம் சேர்வார்கள். எல்லா விருப்பமும் நிறைவேரும் என்று சொன்னார். 



Rate this content
Log in

Similar tamil story from Inspirational