"பீஷ்ம விரதம் part 5"
"பீஷ்ம விரதம் part 5"


ருரு மஹரிஷி தன் மனவியாகப் போகின்றவளைக் கடித்தததற்காகச் சர்பங்கள் எல்லாவற்றையும் கொன்று வந்தார். ஒரு சமயம் காட்டில் மிகவும் வயதான, பால் நிறமுள்ள இரண்டு தலைகளும் கொண்ட "டுண்டுபம்" என்னும் பாம்பை அடிக்கத் தடியை ஓங்கினார். அந்த சர்பம் " மஹரிஷியே! நான் என்ன தவறு செய்தேன்”? என்று கேட்டது. "உன் இனமே என் மனைவியைக் கடித்தது. அதனால் உங்கள் இனத்தைக் கொல்வதே என் சபதம்" என்றார்.' உன் மனைவியைக் கடித்த சர்பத்தைத் தானே கொல்ல வேண்டும். நான் என்ன சர்பமா? என்னை ஏன் அடித்தீர்? என்னைக் கொல்ல உம்மால் முடியுமா? என்றது.
உடனே மஹரிஷி நீ யார்? என்று கேட்டார். அந்த சர்பம் சொல்லியது" எனக்கு மேககன் என்னும் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அக்னிஹோத்திரம் செய்யும் பொழுது பாம்பு போல் ஒன்றைப் போட்டு "பாம்பு! பாம்பு!" என்று அலறிக் கத்தினேன். அவனும் பயந்து நடுங்கி ஓடினான். பின்பு அது உண்மைப் பாம்பல்ல ,பொய்பாம்பு என்று அறிந்து "அட மூடனே! பொய்யான பாம்பைக் காட்டி என்னை பயம் காட்டினாயே. உண்மையான பாம்பின் ரூபத்தை அடைவாயாக" என்று சபித்தான். பின் நான் மன்றாடி மன்னிப்புக் கேட்டபடியால் ருரு மஹரிஷியால் உன் சாபம் நீங்கும் என்று கூறினான். அதன்படி என் சாபம் உம்மால் நீங்கியது. ' மஹரிஷியே! நான் ஒன்று சொல்கிறேன். நீர் எந்த ஜீவ ஜந்துக்களையும் கொல்லக் கூடாது. கருணை காட்ட வேண்டும்" என்று சொல்லி பிராமணன் உருவம் எடுத்தார். ருரு மஹரிஷியும் அன்று முதல் சர்பங்களைக் கொல்வதை விடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். “ருரு மஹரிஷி தன் பத்தினியைக் கடித்ததற்காகப் பாம்புகளைக் கொன்றார்.
உன் தந்தையைக் கடித்த ஸர்பங்களை நீ கொல்லாவிட்டால் உன் தந்தைக்குத் துர்கதிதான். அதனால் நீ சர்பயாகம் செய்" என்று அந்த ஜனமேஜயனைச் சந்தித்த உத்துங்க மஹரிஷி கூறினார். என் தந்தை நற்கதியை அடைய வேண்டும் என்று ஸர்ப யாகத்திற்கான, ஏற்பாடுகளைச் செய்து கங்கா தீரத்தில் யாகசாலை கட்டி யாகம் செய்ய ஆரம்பித்தான். இதை அறிந்த தக்ஷகன் இந்திரனிடம் அபயம் கேட்டான். இதைத் தன் தவ வலிமையால் உத்துங்க மஹரிஷி அறிந்து, அவர்களைத் தன் மந்திர சக்தியால் யாக சாலைக்கு ஓடி வரும்படிச் செய்தார்.
அப்பொழுது தக்ஷகன் ஆஸ்தீகர் என்னும் ரிஷியை சந்தித்து விபரம் சொல்ல, அவரும் யாகசாலை வந்து ஜனமேஜயனை சந்தித்தார். ஜனமேஜயனும் முனிவரே! நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க அவரும் யாகத்தை நிறுத்தும்படிச் சொன்னார். முனிவர் சொன்னதை எப்படி மறுப்பது? அதனால் யாகத்தை நிறுத்தினான். துக்க மடைந்த ஜனமேஜயன் வ்யாஸரைச் சந்தித்து துர்கதி அடைந்துவிட்ட என் தந்தைக்கு ஸ்வர்கம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்? மேலும் இந்த ஆஸ்திக ரிஷி யார்? அவர் ஏன் யாகத்தை நிறுத்தினார்" என்று கேட்டார்.
வ்யாஸர் சொன்னார் "கேட்பதற்கு ஆச்சர்யமானதும் புண்யமானதுமான ஒரு புராணம் உள்ளது. அதைக் கேட்டால் மனச் சாந்தியும், உன் பிதாவிற்கு ஸ்வர்கலோகமும் கிடைக்கும். இதை என் மகனான சுகருக்கும் நான் உபதேசித்திருக்கிறேன். நீயும் கேட்டால் பரம சுகமும், நித்யத்வமும், சர்வ சம்பத்தும் கிடைக்கும். அதுதான் தேவீ புராணம்" என்றார். தேவீபுராணம் கேட்க நான் ஆவல் உடையவனாக இருக்கிறேன். இருப்பினும் அந்த ஆஸ்தீக ரிஷி யார்? ஏன் யாகத்தை நிறுத்தினார்? இந்த சர்பங்களை ஏன் காப்பாற்ற வேண்டும்? என ஜனமேஜயன் கேட்டான். வ்யாஸர் சொல்ல ஆரம்பித்தார்.