anuradha nazeer

Inspirational

4.5  

anuradha nazeer

Inspirational

"பீஷ்ம விரதம் part 4"

"பீஷ்ம விரதம் part 4"

3 mins
23


ருரு மஹரிஷியின் நம்பிக்கைப் போல் தானும் ஏதேனும் வழி தேட வேண்டும் என நினத்துத், தன்னை காப்பாற்றக் கூடிய மணிமந்திர ஔஷதங்களினாலேயும், கவசம் போன்ற மந்திரிகளின் யோசனைப்படியும், 7 மதில்கள் கொண்ட ஒரு கோட்டையை அமைத்து அதில் மந்திரிகளுடன் குடி புகுந்தான். ஔஷதங்களில் வல்லமையுடையவர்களையும், அவர்களின் தொழிலைச் சரிவரச் செய்ய கௌரமுகர் என்ற மஹரிஷியையும் ஏற்பாடு செய்தான்.


பிராமணோத்தமர்களை அங்கு இருக்கும் அனைவரையும் சோதிக்கும் படியும், மந்திரி குமாரர்களை உப்பரிகையில் யாரும் போகாது இருக்கவும், கோபுரத்வாரத்தில் யானைகளைக் கட்டி அங்கு வரும் காற்றினை காதசைவால் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டு கோட்டையின் உள்ளிருந்து அரசாக்ஷி செய்தான். அப்பொழுது மந்திர வித்தை அறிந்த கஸ்யபன் என்னும் பிராமணன், அரசன் இருக்கும் இடமான கோட்டைக்குப் போக நினைத்தான். அந்த சமத்தில் தக்ஷகன் என்னும் சர்பராஜன் நாக லோகத்திலிருந்து பூலோகம் வந்தான்.


ஒரு பிராமணன் போல் வேஷம் தரித்து, கஸ்யபரைப் பார்த்து, அவர் எங்கு போகிறார் என்றும் கேட்டான். கஸ்யபர்" பரீக்ஷித்து மஹாராஜாவை தக்ஷகன் என்னும் பாம்பு கடிக்கப் போகிறது. அந்த விஷத்தால் ராஜா இறக்காமல் இருப்பதற்கான மந்திர சித்தி என்னிடம் உள்ளது அதனால் நான் அங்கு போகிறேன் என்று சொன்னார். உடனே சர்பராஜன் " நான் தான் தக்ஷகன். அவரைக் கடிக்கவே நான் போகிறேன்.


உம்மால் அவரைக் காப்பாற்ற முடியுமா? உமக்கு அந்த சக்தி உள்ளதா? நீர் பேசாமல் திரும்பிப் போய்விடும்" என்றார். கஸ்யபர் "என் மந்திர பலத்தால், சக்தியால் நான் அவரைப் பிழைக்க வைப்பேன்" என்றார். சர்பராஜன் ஒரு மரத்தைக் கடித்து சாம்பலாக்கினான். உடனே கஸ்யபர் அந்த சாம்பலை ஒன்று திரட்டி,கையில் நீரை எடுத்து மந்திரத்தை ஜபித்து அதன் மீது தெளித்தார். உடனே அந்த மரம் வளர்ந்து இலை, பூ காய், பழங்களுடன் ஓங்கி வளர்ந்தது. தக்ஷகன் அவரின் மந்திர சக்தியின் வல்லமையை அறிந்தான்.


"நீவீர் அந்த ராஜாவைக் காப்பாற்றுவதால் என்ன லாபம் அடையப் போகிறீர்?" என்று கேட்டான். கஸ்யபரும் தனம் வேண்டியே இதைச் செய்யப் போகிறேன். என்றார். தக்ஷகன் தான் அவருக்கு வேண்டிய அளவு பணம் தருவதாகச் சொன்னான். கஸ்யபர் யோசித்தார். தன்னுடைய ஞானத்தால் இது தவிர்க்க முடியாத மரணம் என்று அறிந்தார். அதனால் தக்ஷகனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டுத் தன் இருப்பிடம் திரும்பினார்.   


இந்த பரீக்ஷித்து மஹாராஜாவைப் போல் யாரும் இருந்ததில்லை. யாராவது செத்த பாம்பை பிராமணன் கழுத்தில் போடுவானா? இந்த பாபத்திற்கான கதியை அவன் அடைந்தே தீருவானே. மணி மந்திரங்களும். ஔஷதமும் இவனைக் காப்பாற்ற முடியுமா? மரணத்தை யாரால் வெல்ல முடியும்? தான தருமங்களால் ஸ்வர்கத்தை அடையலாம். இறப்பைத் தடுக்க முடியுமா? இதை அறியாவனாக இருக்கிறானே என்று தக்ஷகன் நினைத்தான். பின் தன்னுடன் இருக்கும் நாகங்களை தவ வேடம் கொண்ட பிராமணர்களைப் போல் கையில் நல்ல உயர்ந்த பழங்களுடன் அரண்மனை நோக்கிச் செல்லுங்கள் என்று சொல்லி, அந்த பழத்தினுள் கிருமி ரூபத்தில் புகுந்தான். அரண்மனைக்குச் சென்றவர்களை காவலாளி உள்ளே விடவில்லை.


அரசனின் ஆயுளை வேண்டி மந்திரித்துக் கொண்டுவந்த பழம் இது. என்று கூற, அவர்கள் அரசனிடம் தெரிவித்தனர். பழத்தைக் கொண்டு வாருங்கள். நாளை அவர்களைச் சந்திகிறேன் என்று அரசன் சொல்லி அனுப்பினார். அரசன் அவர்கள் கொடுத்த பழத்தில் அழகான ஒரு பழத்தை எடுத்து இரண்டாகப் பிளந்தான். அதில் ஒரு புழுவைக் கண்டான். சூரியன் மறையும் நேரம் இது. விஷத்தால் பயம் இல்லை என்று சொல்லி அந்த புழுவைத் தன் கழுத்தில் விட்டான். தக்ஷகன் தன் உருவத்தை எடுத்து அவரின் கழுத்தைக் கடித்தான். அரசனைத் தன் விஷ அக்னியால் தகித்து விட்டுச் சென்றுவிட்டான்.


சாபத்தினால் விஷம் தீண்டி பரீக்ஷித்து மஹாராஜா இறந்தான்.   அதன் பிறகு அவர் மகனான, குழந்தையான, ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்தார்கள். ஜனமேஜயன் வேத சாஸ்திரங்களையும், தனுர்வித்தைகளையும் நீதி நூல்களையும் ஐயம் இன்றிக் கற்று அதன் படி அரசாண்டு வந்தான். காசி ராஜன் மகளான வபுஷ்டையை மணந்து கொண்டான்.


மகிழ்ச்சியாக வாழ்ந்தும் வந்தான். இந்த சூழ்நிலையில் உத்துங்கனென்னும் மஹரிஷி, பரீக்ஷித்தை கொன்ற தக்ஷகனைக் கொல்ல யாரை அணுகுவது என்று யோசித்து, அவன் மகனான ஜனமேஜயனிடம் சென்றார். அவனிடம் "ராஜாவே! உன் சத்ருவை நீ அறிந்து கொள்ளாமல் சிறு பிள்ளை போல் கவலையில்லாமல் சந்தோஷமாக இருக்கின்றாயே!" என்றார். யார் அந்தப் பகைவன்? என்று ஜனமேஜயன் கேட்க முழு விபரமும் சொன்னார். மந்திரிகளிடமும் விபரம் அறிந்து, கவிஜாதரின் சாபத்தால்தான் தக்ஷகன் பிதாவைக் கடித்தான். அவனுக்குத் தன் பிதாவிடம் ஏதும் பகை இல்லை என்றும் அறிந்தான். அதனால் தக்ஷகன் என் தந்தைக்கு எதிரி அல்லவே? என்றான். அவர் சொன்னார் ராஜாவே! உன் தந்தையைக் காக்க வந்த அந்தணனை பணம் தந்து யார் திருப்பி அனுப்பியது? தக்ஷகன் தானே? அவன் எதிரியா? நண்பனா? என்றார்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational