anuradha nazeer

Inspirational

4  

anuradha nazeer

Inspirational

பீஷ்ம விரதம் part 3

பீஷ்ம விரதம் part 3

2 mins
7


பரீக்ஷித்து பரிபாலனம் செய்து வரும் போது ஒரு நாள் காட்டிற்கு வேட்டை ஆடச் சென்றான். பசி, தாகம் இரண்டும் அவனை வாட்ட, நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகியைப் பார்த்துத் தண்ணீர் கேட்டான். அவர் நிஷ்டையில் இருந்ததால் எந்த பதிலும் இல்லாததால் கோபம் கொண்டு அங்கு இறந்து கிடந்த ஒரு பாம்பை அவர் கழுத்தில் சுற்றினான். அப்பொழுதும் பதில் இல்லை.. சுற்றிய பாம்பால் அவர் கழுத்தைப் பற்றி இழுத்தான். பயன் உண்டா?


இல்லை. அவர் யோக நிலையிலிருந்து மாறவில்லை. பசுவின் வயிற்றில் பிறந்த மஹா தபஸ்வியான அவரது மகன் அங்கு வந்தார். தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பைப் பார்த்தான். உடனே கோபம் கொண்டு 'என் தந்தையின் கழுத்தில் இறந்த இந்த பாம்பைச் சுற்றியவன் இன்னும் 7 நாட்களில் தக்ஷகன் என்னும் சர்பராஜன் (பாம்பு) கடித்து இறப்பான்" என்று சாபம் தந்தார். முனிகுமாரன் தந்த சாபத்தை அறிந்த அரசன், எப்படியாவது அதற்குப் பரிகாரம் தேடவேண்டும், இல்லையெறால் சாபம் பலித்துவிடும் என்று, பண்டிதர்களை அழைத்து அதற்கு வழி தேடினான்.


புத்திமான்களின் உபாயம் நிச்சயம் சித்தியாகும் என்று ஒரு உதாரணம் சொன்னான்.   ஒரு சமயம் ஒரு ரிஷிபத்னீ விஷம் தீண்டி இறந்து விட்டாள். ஆனால் அவள் கணவனான ருரு மஹரிஷி தன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தார். எனவே முயற்சி இருந்தால் காரிய சித்தி கிடைக்கும். பிருகு மஹாமுனிவரின் பத்னி புலோமை என்பவள். அவர்களது மகன் யவனன். யவனனின் மனைவி சுகன்யை, இவள் சர்யாதி என்னும் அரசனின் மகள். இவர்களது மகன் பிரமாதி. பிரமாதியின் மனைவி பிரதாபி.


ருரு மஹரிஷி இவர்களின் புதல்வன். இவர் மேனகையின் பெண்ணைக் கண்டு விருப்பம் கொண்டார். மேனகை என்னும் கந்தர்வப் பெண் விசுவாவசு என்னும் கந்தர்வனோடு நதிக்கரையில் கிரீடித்து கர்பமடைந்தாள். மேனகை ஸ்தூலகேசருடைய ஆஸ்ரமத்தை அடைந்து அங்கு ஒரு அழகானப் பெண் குழந்தையை பெற்றுவிட்டுத் தன் உலகம் சென்றாள். அதற்குப் பிரமத்வரை என்று பெயர். ருரு மஹரிஷி பிரமத்வரைக் கண்டு மோகித்துத் தன் தந்தையிடம் தன் விருப்பத்தைக் கூறினார். இரு மஹரிஷிகளும் ஒன்று கூடி திருமணத்தை நிச்சயித்தனர்.


அதுசமயம் முற்றத்தில் விளையாடிக் கொண்டு இருந்த பிரமத்வரை, விஷம் தீண்டி இறந்தாள். அங்கு வந்த கணவனாக வேண்டிய ருரு மஹரிஷி தானும் மிகவும் வேதனை அடைந்து தானும் உயிர்விட நினைத்தார். துர் மரணம் மேல் உலகத்திலும் தன்னை விரும்பியவளுடன் சேர்க்காது என்று நினைத்து, ஆற்றில் இறங்கி ஸ்நானம் செய்து கையில் நீரை எடுத்து "நான் பக்தியுடன் இதுநாள் வரை சகல காரியங்களையும் அதாவது, ஆராதனை, பூஜை, ஹோமங்கள், ஜபம், காயத்ரி ஜபங்கள் போன்றவைகளை, முறைப்படிச் செய்திருந்தால் என் பிராண நாயகி உயிர் பெற்று எழ வேண்டும்.


இல்லையென்றால் நான் என் உயிரை விடுவேன்" என்று இஷ்ட தெய்வத்தை வேண்டி ஜலத்தை பூமியில் விட்டார். ருருவின் நம்பிக்கையைப் பார்த்து கால தூதன் "உன் ஆயுளில் பாதியைத் தத்தஞ் செய்தால் அவள் உயிர் பெறுவாள்" என்றார். அவரும் அப்படியே செய்தார். காலதூதன் தர்மராஜனிடம் சென்று நடந்ததை சொல்ல, அவரும் மனம் இரங்கி பிரமத்வரையை உயிர்ப்பித்தார். ருரு கால தேவனுக்குத் தன் நன்றியைச் சொன்னார்." நீ உயிரை எடுப்பவன் அல்ல. கொடுப்பவன்" என்றார்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational