பஹவத் கீதை
பஹவத் கீதை
வேட்டியும் துண்டுமாக அந்த எளிமையான மனிதர் சென்னை கடற்கரையில் அமர்ந்தபடி பஹவத் கீதாவை படித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயம் ஒரு இளைஞன் அவர் அருகில் வந்து, “இந்த விஞ்ஞான யுகத்தில் இன்னுமா இதையெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்துவிட்டான்.நீங்கள் என்னடா என்றால் இன்னும் ராமாயணம், மஹாபாரதம் என்று அந்தக் காலத்திலேயே நின்று
கொண்டிருக்கிறீர்களே” என்றான் ஏளனமாக.
அதற்கு அவர், ”நீ பஹவத் கீதை படித்திருக்கியா, உனக்கு அது பற்றி தெரியுமா?” என்று கேட்க, அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் மேலே தொடர்ந்தான்.
“இதெய்ல்லாம் படித்தால் என்ன ஆகும்? என்ன லாபம்? நான் விக்ரம் சாராபாய் என்னும் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்தில் ஒரு விஞ்ஞானி. இதெல்லாம்
சுத்த வேஸ்ட்”
அதைக் கேட்ட அந்த கனவான் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.அந்தச் சமயத்தில் இரண்டு பெரிய உயர் ரகக் கார்கள் அவர்கள் அருகில் வந்து நின்றன.
ஒரு காரிலிருந்து ராணுவர் வீரர் ஒருவரும், மறு காரிலிருந்து பாதுகாப்புப்ப்டை கமாண்ட்டொக்களும் இறங்கினார்கள்.
ராணுவ வீரர் காரின் பின் கதவைப் பணிவுடன் திறந்து விட்டு ராணுவ மரியாதையுடன் சல்யூட் அடித்தார். பகவத் கீதா படித்துக் கொண்டிருந்த அந்த கனவான்
காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தவுடன், கார் மெல்ல நகரத் தொடங்கியது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளைஞன் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான். அதிலிருந்து மீண்டு கார் அருகில் ஓடிச் சென்று “ சார்...சார்..
தாங்கள் யார்?” என்று பதட்டத்துடன் வினவ,
நிதானமான புன்னகையுடன் கனவான் பதிலளிதார்.
“நான் தான் விக்ரம் சாராபாய்”
அந்த இளைஞன் யார் தெரியுமா ! அவர்தான் டாக்டர்
அப்துல் கலாம்.
அதன் பின் டாக்டர் அப்துல் கலாம் ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதா எல்லாம் படிக்கத் துவங்கினார். அனைத்தும் படித்து அறிந்தபின் இனி ஒரு போதும்
அசைவ உணவைத் தொடுவதில்லை என உறுதி பூண்டார். பஹவத் கீதை கதை அல்ல ”கீதா ஒரு விஞ்ஞானம்” என்று தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
நம் இதிகாசங்கள் நம் கலாச்சாரப் பொக்கிஷங்கள் அவற்றை நாம் போற்றுவோம். பாதுகாப்போம்.
