பெருமை
பெருமை


நாங்கள் நான்கு பேர் அக்கா தங்கை .
என் வீட்டிலேயே என் கல்யாணம் லவ் மேரேஜ்.
எங்களுக்கு பிடித்தபடி எங்கள் திருமணத்தை நாங்கள் நடத்திக் கொண்டோம்.
திருமணம் முடிந்த கையோடு என் வீட்டிற்குச் சென்று என் கணவரை அவர்களுக்கு எல்லாம் நான் அறிமுகப்படுத்தினேன்.
நாம் பொருளாதார அடிப்படையில் யாரையும் சார்ந்து இருக்காத போது நமக்கு ஒரு தைரியம் வரும் .
அதனால். தான் லவ் மேரேஜ் நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
அது போல் என் வீட்டில் அனைவருக்கும் அறிமுகப் படுத்தினேன்.
என் மூன்று தங்கைகளுக்கும் தான் அழகு என்று கர்வம்.
மூன்று பேரும் மிக வெள்ளையாக அழகாக இருப்பார்கள்.
அவருக்கு எப்போதுமே குறும்பு அதிகம் உண்டு.
மிக இனிமையாக வசீகரமாக சிரிக்க சிரிக்க பேசக்கூடியவர்.
எல்லோருக்குமே அவரிடம் மிகவும் பிரியம் ஜாஸ்தி.
நல்ல. வசீகரம் மிக்கவர்.
மூன்று பேரும் அவரிடம் சொன்னார் . நாங்கள் எல்லாம் அது பேரழகிகள் என்று. உடனே என் கணவர் சொன்னார் .
நான் தான் மூத்த பேரழகியை கட்டி இருக்கிறேனே.
எனக்கு தெரியாதா. என்று
எனக்குத்தான் பெருமை அதிகம் என்றாரே பார்க்கலாம் எல்லார் முகமும் சிறுத்துப் போய் விட்டது