பெண்
பெண்

நான் மிகவும் ஏழை வீட்டுப் பெண்.
எனக்கு அப்பா கிடையாது .
அம்மா மட்டுமே .
அம்மா நாலு இடங்களில் பத்து பாத்திரம் தேய்த்து தான் என்னை காப்பாற்றுகிறாள்.
எங்கள் வீட்டில் நான்கு பேர்.
நான் என் அக்கா, ஒரு தங்கை ,ஒரு தம்பி. அப்பா இல்லாத வீட்டை நிர்வகித்து நடத்துவது என்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது அம்மாவிற்கு.
அம்மாவும் தான் என்ன செய்வாள்? படிப்பறிவு இல்லாதவ ள் .அவளை அவர்கள் பெற்றோர்கள் வீட்டில் படிக்க வைக்க விடவில்லை.
என் தாயின் பெற்றோர்கள் மிகவும் ஏழை கிடையாது .
ஆனால்பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவது மிகவும் தவறு .
பொம்பள சிரிச்சா போச்சு .புகையிலை விரிச்சா போச்சு என்று நினைப்பவர்கள். எனவே தன் பெண் குழந்தையை பள்ளிக்கு அனுப்பவில்லை .
என் அம்மா படிப்பறிவு ,எழுத்தறிவு ஏதும் அற்றவள்.
இந்த சூழ்நிலையில் சீரும் சிறப்புமாக அம்மாவிற்கு கல்யாணத்தை பண்ணி வைத்துவிட்டனர். அவளது பெற்றோர்கள் . ஆனால் படிப்பறிவில்லாத என் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது. இந்த சூழ்நிலையில் என் அப்பா திடீரென்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
பாவம் 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மா என்ன செய்வார்கள்?
அவர்களுக்கு தெரிந்த ஒரே வேலை வீட்டு வேலை மட்டும்தான்.
எனவே நான்கு வீடுகளில் கிராக்கி பிடித்துக்கொண்டு பத்து பாத்திரம் கழுவுவது ,வீட்டை பெருக்குவது, சுத்தப்படுத்துவது, காய்கறி நறுக்குவது, என்ற வீட்டு வேலைகளை கடினமாக உழைத்து வந்தாள்.
இந்த சூழ்நிலையில் என் அம்மாவிற்கு தன் குழந்தைகளை கான்வென்ட் ஸ்கூலில் சேர்க்கணும்.
பிள்ளைகள் யூனிபார்ம் அணிந்து செல்வதை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற ஆசை.
தான் படிக்கவில்லை, தன் குழந்தைகளாவது படிக்க வேண்டுமே என்று ஏங்கித் தவித்தாள் .
என்ன செய்வது பாவம் பெண்ணாக பிறந்துவிட்டாள்.
எல்லோருக்குமே கண்ட கனவுகள்நிறைவேறும் என்று வாய்ப்பு கிடையாது.
கனவு காண்பது மட்டுமே நம் உரிமை.
நான் மிகவும் ஏழை வீட்டுப் பெண்.
எனக்கு அப்பா கிடையாது .
அம்மா மட்டுமே .
அம்மா நாலு இடங்களில் பத்து பாத்திரம் தேய்த்து தான் என்னை காப்பாற்றுகிறாள்.
எங்கள் வீட்டில் நான்கு பேர்.
நான் என் அக்கா, ஒரு தங்கை ,ஒரு தம்பி. அப்பா இல்லாத வீட்டை நிர்வகித்து நடத்துவது என்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது அம்மாவிற்கு.
அம்மாவும் தான் என்ன செய்வாள்? படிப்பறிவு இல்லாதவ ள் .அவளை அவர்கள் பெற்றோர்கள் வீட்டில் படிக்க வைக்க விடவில்லை.
என் தாயின் பெற்றோர்கள் மிகவும் ஏழை கிடையாது.
ஆனால்பெண் குழந்தைகளை வெளியே அனுப்புவது மிகவும் தவறு .
பொம்பள சிரிச்சா போச்சு .புகையிலை விரிச்சா போச்சு என்று நினைப்பவர்கள். எனவே தன் பெண் குழந்தையை பள்ளிக்கு அனுப்பவில்லை.
என் அம்மா படிப்பறிவு ,எழுத்தறிவு ஏதும் அற்றவள்.
இந்த சூழ்நிலையில் சீரும் சிறப்புமாக அம்மாவிற்கு கல்யாணத்தை பண்ணி வைத்துவிட்டனர்.
அவளது பெற்றோர்கள் .
ஆனால் படிப்பறிவில்லாத என் அம்மாவிற்கு எதுவுமே தெரியாது .
இந்த சூழ்நிலையில் என் அப்பா திடீரென்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்.
பாவம் 4 குழந்தைகளை வைத்துக்கொண்டு அம்மா என்ன செய்வார்கள்?
அவர்களுக்கு தெரிந்த ஒரே வேலை வீட்டு வேலை மட்டும்தான்.
எனவே நான்கு வீடுகளில் கிராக்கி பிடித்துக்கொண்டு பத்து பாத்திரம் கழுவுவது ,வீட்டை பெருக்குவது, சுத்தப்படுத்துவது, காய்கறி நறுக்குவது, என்ற வீட்டு வேலைகளை கடினமாக உழைத்து வந்தாள்.
இந்த சூழ்நிலையில் என் அம்மாவிற்கு தன் குழந்தைகளை கான்வென்ட் ஸ்கூலில் சேர்க்கணும்.
பிள்ளைகள் யூனிபார்ம் அணிந்து செல்வதை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற ஆசை.
தான் படிக்கவில்லை, தன் குழந்தைகளாவது படிக்க வேண்டுமே என்று ஏங்கித் தவித்தாள் .
என்ன செய்வது பாவம் பெண்ணாக பிறந்துவிட்டாள்.
எல்லோருக்குமே கண்ட கனவுகள் நிறைவேறும் என்று வாய்ப்பு கிடையாது.
கனவு காண்பது மட்டுமே நம் உரிமை.