பாராட்டு
பாராட்டு


வாழ்க்கையில். பாராட்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எந்த சூழ்நிலையையும் மாற்ற வல்லது.
இரு நண்பர்கள் இருந்தார்கள்.
சிறு வயது முதல் நட்பு கொண்டவர்கள்.
இருவரும் தனித்தனியே சூப்பர்மார்க்கெட் ஆரம்பித்தார்கள்.
ஒருவன் ராமன் .
ஒருவர் கிருஷ்ணன்.
ராமர் கடை அதிவேகமாக வளர்ச்சி அடைந்தது .
ஆனால் கிருஷ்ணன் கடை வியாபாரம் மந்தம்.
என்ன செய்வது என்றே புரியவில்லை .
ஒருநாள் தன் நண்பனை சந்தித்து ராமா இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி கடை ஆரம்பித்தோம்.
உன். கடை என்னவென்றால் வளர்ந்துகொண்டே போகிறது.
என் கடையை மந்தமாக போய்க்கொண்டிருக்கிறது .
லாபமும் காணவில்லையே.
ஏனென்று கேட்டான்
அதற்கு ராமன். நீ உன். கீழ் வேலை செய்பவர்களை பாராட்ட வேண்டும் அதுதான். அவர்களை உற்சாகப். படுத்தும் வழி என்று கூறினார்
அவர்களை எப்படிப் பாராட்டுவது ?
மந்தமாக இருக்கிறார்கள். வேலையே செய்ய வில்லையே என்று கிருஷ்ணன் கூறினார்.
ஒரு
நாள் என்னுடன் வெளியே வா என்று ஒரு உயர்ந்தஓட்டலுக்கு கிருஷ்ணனை அழைத்துச்சென்றான் ராமன்.
அங்கு சாப்பிடும் மேஜையில் இருவரும் உட்கார்ந்தார்கள்.
நீண்ட நேரம் கழித்துதான் அந்த பணி புரிபவர் வந்தார்.
அப்போது ராமன் அவரைப் பார்த்து Good Evening சார் என்றான்.
அவன் பதில் சொல்லவில்லை .
ஒரு புன்சிரிப்பு கூட செய்யவில்லை.
பிறகு தங்களுக்கு தேவையானஆர்டரை ராமர் கொடுத்தார்.
தாங்கள் மிகுந்த சோர்வுடன் காணப்படுகிறீர்கள்.
என்றாலும் நீண்ட சுறுசுறுப்புடன் இந்த மாலை வேளையில் கூட வேலை செய்கிறீர்கள் என்று பாராட்டினார்.
அதைக். கேட்ட பின்பு ஒரு சிறு மெல்லிய புன்சிரிப்பு அவர் முகத்தில் தோன்றியது.
பிறகு. சாப்பிட்டு முடித்து. பணியாளருக்கு டிப்ஸ் கொடுத்தார் ராமர்.
நன்றி மீண்டும் வருக என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அந்த ஹோட்டல் சிப்பந்தி.ஹோட்டல் சிப்பந்தி மிக சுறு சுறுப்பாகி விட்டார்.
இப்போது கிருஷ்ணனுக்கு புரிந்தது. ராமன் வெற்றிக்கு காரணம்