Salma Amjath Khan

Romance

4.5  

Salma Amjath Khan

Romance

நீயே என் ஜீவனடி 19

நீயே என் ஜீவனடி 19

5 mins
316


காலை எழுந்ததிலிருந்தே மனது சிறிது அழுத்தமாகவே இருந்தது, ஆனந்திக்கு.

தனது மன பாரத்தை யாரிடம் கழட்டி வைப்பது என தெரியாமல் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தாள்.

இன்று தன் தாய் தந்தையரின் திருமணநாள். எப்பொழுதும் அவர்களுக்கு முதல் வாழ்த்து ஆனந்தி தான் கூறுவாள். இன்று அவளால் வாழ்த்தை தெரிவிக்க முடியாது என நினைக்கும் போதே கண்களில் அணையை உடைப்பதற்கு தயாராகியிருந்தது, கண்ணீர்.

நம்மால் தான் இங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. தன் தாய் தந்தையராவது தன்னை தேடிக்கொண்டு வந்து இருக்கலாம் அல்லவா??? என ஏங்கிக் கொண்டிருந்தாள்.

அவர்கள் தன்னை தேடவில்லை ஒருவேளை அவர்களுக்கு ஏதாவது ஆபத்து இருக்குமோ????

சிதம்பரம் ஏதாவது பிரச்சினை செய்திருப்பானோ???

இல்லை இல்லை அரவிந்த் தான் கூறினானே அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று.

ஆமாம் அது எப்படி அவனுக்கு தெரியும் ஒரு வேளை இவன் தான் கடத்தி வச்சிருப்பானோ???

இல்ல இல்ல ஆரு அப்படி எல்லாம் பண்ண மாட்டான்.

எனக்கு இப்பவே என் அப்பா அம்மாவ பார்க்கணும். அட்லீஸ்ட் அவங்க குரலையாவது கேட்கணும். என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என யோசித்து தன் திட்டத்தை தீட்டி கொண்டிருந்தாள்.

ஹாலில் சோபாவில் அமர்ந்து ஏதோ ஃபைலை புரட்டிக் கொண்டிருந்த அரவிந்தை மாடியில் இருந்தே பார்த்த ஆனந்தி பெருமூச்சொன்றை விட்டாள்.

' கடவுளே எனக்கு கொஞ்சோண்டு தைரியத்தை மட்டும் கொடு. எந்த இடத்திலேயும் சொதப்பாம நீதான் பாத்துக்கணும். ப்ளீஸ் கடவுளே ஹெல்ப் மீ....' என தன் வேண்டுதல்களை அவசரமாய் கடவுளுக்கு வைத்தவள், கடவுள் தைரியத்தை கொடுப்பான் என்ற தைரியத்தில், 'ஆரு' என அழைத்துக் கொண்டே படிகளில் இருந்து இறங்கியவள் அவன் அருகில் சென்றாள்.

" என்னன்னே தெரியல ஆரு இன்னைக்கு மார்னிங் எந்திரிச்சதுல இருந்தே ஐஸ் கிரீம் சாப்பிடனும் போல இருக்கு." என்றவள் உரிமையாய் அரவிந்தின் சட்டைப் பையில் கையை விட்டாள்.

ஆனந்தியின் திடீர் செயலை எதிர்பாராதவன் அவள் கண்களை ஆராய்ந்தார்.

' இன்னைக்கி ஏதோ பிளான் போட்டா. என்னவா இருக்கும்.' என அவள் கண்களை கூர்ந்து நோக்க, அவள் கண்கள் அவன் சட்டைப் பையில் இருந்த ரூபாய் நோட்டுகளின் மேல் நிலைத்திருந்தாலும்,

' ஐயையோ நம்மளையே குறுகுறுன்னு பார்க்கிறானே ஆனந்தி. தப்பித்தவறி கூட அவனை பார்த்திராதடி. அப்புறம் தைரியம் போய்டும். அப்பறம் உளற ஆரம்பிச்சிடுவ. அப்புறம் பிளான் டோட்டல் பிளாப் தான்.

' ஐயோ இன்னும் நம்மள பட்டிக்காட்டான் மிட்டாய பாக்குற மாதிரியே பார்க்கிறானே.

என்ன சொல்லி என்ன பட்டிகாட்டான் தானே.

மிட்டாயையே பார்க்கும்போது ரசகுல்லா மாதிரி நாம இருந்தா பார்க்க தானே செய்வான்.' என அவன் பார்வையை உணர்ந்து கொண்டிருந்த போதும் உணராதவளாய் அவன் பையில் இருந்து 500 ரூபாயை எடுத்தாள்.

" சரி ஆரு. நான் ஒரு 500 எடுத்திருக்கேன். வரேன் டா." என வெளியில் செல்ல நகர்ந்தவளை நிறுத்தினான், அரவிந்த்.

' அச்சோ' என தன் கண்களை இறுக மூடியவள், 'ஆனந்தி பயப்படாத. அவன்லா ஜுஜுபி. ஈஸியா ஏமாத்திரலாம்.

நீ இப்படி பயந்தா அவன் உன்னை ஏமாத்தி தலையில மொளகா அரச்சுருவான்.' என தன்னை ஊக்கப்படுத்தியவள், பெருமூச்சு ஒன்றை விட்டவாறு திரும்பி அரவிந்தை நோக்கினாள்.

" என்னாச்சு ஆரு..." என அப்பாவியாய் கேட்டாள், ஆனந்தி.

" எங்க போற"

" இது என்ன கேள்வி ஆரு. இப்பதானே சொன்னேன். காலையிலிருந்து icecream சாப்பிடனும் போல் இருக்குன்னு. அதான் ஐஸ்க்ரீம் சாப்பிட போறேன்."

" அப்போ நிஜமா ஐஸ்கிரீம் சாப்பிடத்தான் போறியா..." என சந்தேகமாக கேட்க,

'கண்டுபிடிச்சிட்டானோ... இருக்காது .... அவ்வளவு அறிவு நம்ம ஆருக்கு இல்ல.... சமாளிப்போம்...' என எண்ணியவளாய்,

" ஏன் ஆரு இப்படி கேக்குற...." பாவமாக கேட்கவும், அவள் அருகில் வந்தவன் "உனக்கு ice cream தான் வேனும்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல. நான் வாங்கி வந்திருப்பேன்ல." என ஏக்கமாக கேட்டான், அரவிந்த்.

"அதுதானே அண்ணி. எங்க கிட்ட சொல்லி இருந்தால் கூட கடையை கொண்டு வந்தேன் இறக்கி இருப்பேன்." என்றான், மணி.

' புருஷன் பொண்டாட்டி பேசும்போது நடுல வருது பாரு கரடி...' என முறைத்தவள்,

(( புருசன் பொண்டாட்டி யா....இது எப்போ இருந்து.... ஆனந்தி நீ நடிக்க போறேன்னு தானே என்கிட்ட சொன்ன...))

" ஏன் என்னோட சாக்குல நீ எல்லாத்தையும் மொக்கவா..." என்றவள், அரவிந்தின் புறம் திரும்பி,

"பரவாயில்லை. நானே போய் வாங்குகிறேன்." என மீண்டும் திரும்பியவளை இம்முறை கைப்பற்றி நிறுத்தினான், அரவிந்த்.

" இல்ல ஆனந்தி. நீ போக வேணாம். உனக்கு என்ன வேணும்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்."

' நீ வாங்கிட்டு வருவ. நான் எப்படி என் அப்பா அம்மா கிட்ட பேச முடியும்.' என நினைத்தவள் அரவிந்தின் கண்களை நோக்கினாள்.

" ஏன் ஆரு. நான் ஓடி போய்டுவேன்னு நினைக்கிறயா...??? என்னை நீ நம்பலையா டா...???" என்றவளின் கண்களில் அவளையும் மீறிய ஒரு ஏக்கம் இருந்தது.

இது ஆனந்திக்கு புரியவில்லை என்றாலும் அரவிந்த்க்கு நன்றாகவே புரிந்தது.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் அவளை அழைத்துக்கொண்டு வந்து சோபாவில் அமர வைத்தான்.

அவள் கைகள் அவன் பிடியிலேயே இருந்தது. அவள் கண்களை சந்தித்த அவன் "என்னை விட உன் மேல எனக்கு அதிக நம்பிக்கை இருக்கு ஆனந்தி.

ஆனா நீ வெளியே போறது பாதுகாப்பு இல்ல. உனக்கு என்ன ஐஸ் சாப்பிடணும் போல இருக்குனு சொல்லு. நான் வாங்கிட்டு வரேன்."

" ஐஸ்கிரீம் சாப்பிடனும் போலத்தான் இருக்குன்னு சொன்னேன். அங்கு போய்தான் யாரோட ஐஸ்க்ரீம் சாப்பிடனும் போல இருக்குனு டிசைட் பண்ணனும்."

" என்ன...." என அரவிந்த் புரியாமல் பார்க்க,

" ஆரு...." என இழுத்தவள், " நீ டிவிலாம் பார்க்க மாட்டியா... நமக்கு குலோப்ஜாமுன் பிடிக்காமல் இருக்கும் .... ஆனா டிவில அந்த அம்மா மாவை பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து பாகில் போட்டு கொடுக்கும்போது.... அந்த குட்டி பையன் பெரிய குளோப் ஜாமுன எடுத்து முழுசா அந்த குட்டி வாயில் திணித்து முழுங்கும் போது அப்படியே நம்ம வாயிலேயே கரைந்து நாமலே முழுங்குற மாதிரி இருக்கும்.

ஆனால் என்ன டேஸ்டு தான் தெரியாது.

டேஸ்டு தெரியலையேன்னு ஏக்கமா அம்மாவை பார்த்தா, அம்மா பூரி கட்டைய தூக்கி காட்டி, 'போனவாரம் உனக்காக செஞ்சு முழுசையும் குப்பை தொட்டில கொட்டுனேன்னு' சொல்லி முறைப்பாங்க." என சொல்ல அரவிந்த் மெலிதாகப் புன்னகைத்தான்.

" சிரிக்காதடா.... நீயே சொல்லு.... சாப்பிடற மாதிரி இருந்தால் சாப்பிட மாட்டேனா.... இந்த உண்மையை சொன்னா அந்த பூரி கட்டை என் மண்டையில தான் இருக்கும்." என சொல்ல இப்போது அரவிந்த் சத்தமாகவே சிரித்தான்.

அவன் சிரிப்பில் கரைந்தாலும் "அப்படித்தான் நாம ஏதாவது ஐஸ்க்ரீம் சாப்பிடனும்னு போவோம். ஆனால் அங்கே பார்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சாப்பிடுவாங்க..... அதுல எந்த ப்ளேவர் என் நாக்குல எச்சி ஊற வக்கிதோ அதை சாப்பிட ஆசையா இருக்கும். அதனாலதான் அங்கே போய் டிசைட் பண்ணிக்கலாம்ன்னு கேட்டேன்."

'அய்யோ சொந்த அப்பாக்கு ஒரு போன் பன்ன எவ்ளோ போராட வேண்டியது இருக்கு. நம்மள எச்சிகலன்னு நினைச்சுருப்பானோ.... நினைச்சுட்டு போட்டும்.... அப்பா கிட்ட பேசனும்னா இந்த மாதிரி சில டேமஜ வாங்கித்தான் ஆகனும்.'

"அண்ணி , உங்களுக்கு கொள்கை மிகச் சிறப்பு" என மணி நக்கலாக சொல்ல...

'இந்த பய புள்ள நம்ம லைன அடிக்கடி கிராஸ் பன்னுதே. இதுக்கு ஒரு ஆப்பு வக்கனும்.' என மணியை மனதில் வறுத்தாள்.

அவளின் கதையை ரசித்தான், அரவிந்த்.... 'என்ன பிளான் பன்னிருக்கான்னு தெரியல. பெரிய கதையா சொல்றா.... சரி செல்ல குட்டி என்ன செய்றான்னு பாப்போம்.'

"சரி பார்லர்ல யே சாப்பிடு."

" ஐயோ.... தேங்க்ஸ் ஆரு செல்லம்..." என அவன் தாடையை பிடித்து கொஞ்சினாள்.

" ஆனா ஒரு கண்டிஷன்"

" என்ன..???"

" தனியா போகக்கூடாது."

" பின்ன..????"

.

.

.

.

.

.

30 நிமிடங்களில் ஆனந்தி அந்த குளிரூட்டப்பட்ட பார்லரில் அமர்ந்திருந்தாள்.

கண்களை உருட்டி உருட்டி உதட்டை பிடுங்கிக் கொண்டு அந்த பார்லர்களை நோட்டமிட்டாள்.

9 டேபிளில் இருந்த அந்த பார்லரில் 4 டேபிள்களில் அரவிந்தின் ஆட்களே அமர்ந்திருந்தனர்.

' ஒரு போன் பண்ணலாம்னு தனியா வர பிளான் போட்டா எப்படி உன்னோட படையை திரட்டி வந்துட்டுயே இரு. இப்ப நான் எப்படி போன் பண்றது...'

"ஆனந்தி ....ஆனந்தி..." அரவிந்தின் அழைப்பிலிருந்து ஆனந்தி நடப்பிற்கு வந்தாள்.

" என்ன ஆச்சு ஆனந்தி. என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க."

" நானா.... நான் ஒன்னும் யோசிக்கலையே. ஏன் இப்படி கேக்குற ஆரு..."

" இல்ல, ரொம்ப நேரமா என்ன சாப்பிடறன்னு கேட்டுட்டு இருக்கேன். நீ எதுவும் சொல்லலையே."

" ஓஓஓ... சாரி... ப்ளேஸ் நல்லா இருந்ததா அதான் பார்த்துகிட்டே இருந்தேன். எனக்கு ஒரு கஸாட்டா." என கூற ஆர்டர் எடுக்க வந்த சிப்பந்தி அங்கிருந்து நகர்ந்தான்.

" நான் ஒன்னும் சொல்லட்டுமா ஆனந்தி. நீ இன்னைக்கு என்கிட்ட உரிமையா நடந்துகிட்டது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.

இதுமாதிரி உனக்கு எது எப்போ வேணும்னாலும் என்கிட்ட கேளு ஆனந்தி. நான் நிறைவேற்றி வக்கிறேன்.

எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ நம்ம உறவ சீக்கிரமே புரிஞ்சு ஏத்துக்குவன்னு."

' நினைப்புதான் புழப்பா கெடுக்குமாம். ஆசையை பாரு இந்த ஆருக்கு.

நான் எப்படா இவன்ட இருந்து எஸ் ஆகலான பார்த்தா டயலாக் அடிச்சுகிட்டு இருக்கு' என மனதில் நினைத்தவள் வெளியில் இளித்து வைத்தாள்.

((கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் யாரோ புருஷன் பொண்டாட்டி ன்னு சொன்ன மாதிரி தெரிஞ்சது.... அதுக்குள்ள அந்தர் பல்டி அடிக்குதுபா .... இவள நம்பாதீங்கப்பா....))

அதற்குள் கஸாட்டா வறஆனந்தி அதில் ருச்க்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் அவன் எதுவும் சாப்பிடாமல் இருப்பதை உணர்ந்தாள்.

"ஆரு நீ ஏன் எதுவும் சாப்பிடல."

"எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது ஆனந்திமா." என்றவனை பார்த்து ஆர்டர் எடுக்க வந்த சிப்பந்தி மீண்டும் வந்தான்.

" சார் உங்களுக்கு போன் வந்து இருக்கு"

" எனக்கா" என கேட்ட அரவிந்த் ஆனந்தியை ஏறிட்டான்.

: மீண்டும் சிதம்பரம் ஆக இருக்குமோ 'என்ற பயம் ஆனந்திக்கும் எழுந்தது.

அரவிந்த் ஆனந்தியின் அனுமதி பெற்று சென்றவன் ரிசீவரை காதில் வைத்தவன்அதிர்ச்சியில் நின்றான்.

பிண் சிறு தலை அசைத்து ஏதோ கூறியவன் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஆனந்தியின் அருகே வந்து,

" ஆனந்தி, நீ சாப்பிட்டுகிட்டு இரு. நான் இப்போ வரேன்." என்றவன் பக்கத்து டேபிளில் உட்கார்ந்து இருந்த மணியிடம் கண்காட்டி விட்டு வெளியேறினான்.

' இவன் எங்க போறான். ஏதோ டென்ஷன்ல போற மாதிரி இருக்கே. ஆனந்தி, அவன் எங்க போனா உனக்கு என்ன சொல்லப்போனால் இம்சு(இம்சை) இப்போ இல்ல. இந்த சான்ஸ் வச்சு எப்படியாவது அப்பாக்கு கால் பண்ணி பேசணும்.

இந்தத் அடியாட்களும் எங்கேயாவது போனா பிரியா வெளியே போய் கால் பண்ணலாம்.' என தன்னைச் சுற்றி ஒரு முறை பார்த்தவள், அடியாட்கள் அனைவரும் மும்முரமாக பேசிக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிட, சிறிதும் சத்தம் வராமல் தன் நாற்காலியை நகர்த்தி யாரும் கவனித்த வண்ணம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்தவள், வாசலிலேயே அதிர்ச்சியாக நின்றாள்.

பார்லரின் கண்ணாடி கதவு வழியே அரவிந்த் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை அதிர்ச்சியாக பார்த்தாள்.

அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கும்போதே அரவிந்தின் கன்னத்தில் 'பளார்' என்று அறைய அரவிந்த் அமைதியாகவே நின்றான்.

அவன் முகம் ஏதோ குற்ற உணர்வில் இருப்பதை போல் ஆனந்திக்கு தோன்றியது.

அரவிந்தன் கன்னத்தில் அறைந்த பெண் மறுநிமிடமே அழுது கொண்டு அவனை அணைத்துக்கொள்ள அவளுக்கு ஆறுதலாக அவளின் முதுகை வருடியவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

ஆனந்தியின் மனம் கனத்தது.



Rate this content
Log in

Similar tamil story from Romance