நேர்மறை VS எதிர்மறை
நேர்மறை VS எதிர்மறை


முன்னுரை:
நேர்மறை
எண்ணங்களின் அற்புத சக்திகள்
அதன் பிரதிபளிப்புகள் அனைத்தையும் ரோண்டா பெரின்
எழுதிய 'இரகசியம்' எனும் புத்தகத்தின் வாயிலால்
அறிந்தேன்.
இப்பதிவில் என் சிந்தனைகளை எடுத்துக்காட்டுகளுடன் செதுக்கியுள்ளேன்.
எதிர்மறை தளைக்கும் இடம் :
இங்கு நேர்மறையாக இருப்பவர்கள் மிகவும் அரிது. தனக்கு இருக்கும் நிலை குறித்து மகிழ்ச்சி அடையாமல்
தன்னிடம் இல்லாததைக் குறித்து புலம்பிக் கொண்டே இருப்பவர்களே அதிகம்.
அங்கு தான் எதிர்மறை தளைக்கிறது.
செடியும்,களையும் :
வயலில் பாய்ச்சப்படும் நீரிலே செடியும் வளரும், களையும் வரும் நம் எண்ணங்களும் (நீர்)
அப்படித்தான் நேர்மறையாகவும் இருக்கும் எதிர்மறையாகவும் இருக்கும். எதிர் மறையாகிய
களையைப் பிடிங்கினால் தான் செடிக்கு (நேர்மறை) தேவையான நீரினை உட்கொள்ள முடியும்.
முதல் தடை - எதிர்மறைவாதிகள்:
எதிர் மறையானவர்கள் தன்னையும் இகழ்ந்து ஒப்பிட்டு பிறரையும் அவ்வாறே இருப்பதாக யோசிப்பார். பிறர் முயற்சிகளுக்கும் முதல் தடையாய் இருப்பவரெல்லாம் எதிர்மறை வாதிகளே!!
தினமும் போராடுபவர், தன்னை அறிபவர் :
நேர்மறையானவர்கள் தன் இலக்கினை நோக்கி நற்சிந்தனைகளுடன் , எண்ணங்களுடன் தினமும்
முயற்சிகளில் குறிக்கோளை நோக்கி பாடுபடுவார்
யார் தன்னை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையில் இருந்து
மாற மாட்டார்.
இதன் மூலம் தன்னை அறியும்
தருணம் உருவாகும்.
நேர்மறையின் ஜாம்பவான்கள் :
நேர்மறை எண்ணங்களின் உச்சம் பெற்றவர் அனைவரும் வெற்றியாளர்களே (கலாம் ஐயா, காந்தி, அண்ணா, எம்.ஜீ.ஆர் .........)எந்த தலைவரின் வாழ்க்கை முறையினை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் இலட்சியம் மற்றும் அதற்காக அதனை அடைய வேண்டும் அவர் அனுதினமும் அவர்களின் நேர்மறை எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவர்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றுப் பல சாதனை படைக்கிறார்கள்.
எதிர்மறை - விஷம் :
எதிர்மறை என்பது விஷம் போல துளி வந்து விட்டாலும் நம் வாழ்வு சொர்கமாயினும்
நரகமாக்கும்.
நேர்மை எண்ணங்களின் மூலம்
நம் குறிகோள், தன்னிலை அறிதல், கடந்து செல்லும் மனப்பக்குவம்
எண்ணிலடங்கா நன்மைகள்.
முடிவுரை:
உன் எண்ணங்களையும், செயலையும்
யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே.
அதுவே உன் அடையாளம்.
நேர்மறையோடு இருந்து நம் வாழ்க்கையில் வரலாறு படைப்போம் !!!!.