Participate in the 3rd Season of STORYMIRROR SCHOOLS WRITING COMPETITION - the BIGGEST Writing Competition in India for School Students & Teachers and win a 2N/3D holiday trip from Club Mahindra
Participate in the 3rd Season of STORYMIRROR SCHOOLS WRITING COMPETITION - the BIGGEST Writing Competition in India for School Students & Teachers and win a 2N/3D holiday trip from Club Mahindra

anuradha nazeer

Inspirational


4  

anuradha nazeer

Inspirational


நாவுக்கு அரசர் .

நாவுக்கு அரசர் .

5 mins 135 5 mins 135


அப்பர் என்னும் திருநாவுக்கரசர் : நாவுக்கு அரசர் .


இ வ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று.

 

கலந்தனரேல் ஓதிய கல்வி உரம் பெறும்.இது தான் இயற்கை தந்த இனிய வழி. இந்த தர்மத்தை மறந்து தூய தமது அனுஷ்டானத்தைத் துறந்து வெறும் கேள்வி அளவில் விளங்கி, அவலை நினைத்து உரலை இடிப்பவர் போல், எம் சமயம் ஏற்றம், மற்றவர் சமயம் மட்டம் என்று வாய் வாதத்தையே, பிற் காலத்தவர் வளர்த்தனர். தம் கொள்கைளைத் தழுவாதவர்க்கு தலை வேதனை பல தந்தனர்., வாலறுத்த நரித் தந்திரங்கள் வளர்ந்தன.

 

அறிவு பெருகிய ஆதி சமணம், வளர்ந்து, ஒரு காலத்தில் வாழ்ந்தது. மற்றவரையும் வாழ வைத்தது. இது ஒரு காலம். அச்சமய சார்பு கொண்ட பிற்கால மக்கள், மா பெரும் தம் தர்மத்தை மறந்தனர். எம் சமயமே ஏற்றது என்று கொள்ளித் தேள் போலக் குதித்தனர். எவரையும் தம் சமயத்திற்குள் ஈர்க்க சூழ்ச்சி யந்திரத்தைச் சுழற்றினர். விஞ்ஞானத்தை விருத்தி செய்தனர்.

பல இடங்களைப் பழுது படுத்தினர். பாண்டி நாட்டில் புகுந்தனர். மந்திர தந்திர மரபுகளால் அறிவில் இருளைப் பரப்பினர். தரம் குறைந்தோர் பலர் அவர் சமயத்தைத் தழுவினர். நீறிட்டார் கெட்டார், வீபூதி இடார் வாழ்ந்தார் என்பது அவர்கள் உபதேசம். சைவரைக் கண்டால் பாவம், அவர்கள் குரலைக் கேட்டது தோஷம், இதற்கு கண்டு முட்டு கேட்டு முட்டு என்று பெயர். இப்படி எல்லாம் ஏய்த்து நாளும் சாகஸ நாடகம் ஆடினர். அரசர் பாண்டியரும் அவர்கள் வலையில் அகப்பட்டார்.

 

மகாராணி மங்கையர்க்கரசியார் இந்நிலை கண்டு மனம் வருந்தார். அமைச்சரோடு ஆலோசித்து ஆளுடை பிள்ளையாரை(திருஞான சம்பந்தர்) மதுரைக்கு அழைத்தார். பிள்ளையார் மதுரைக்கு வந்தார். பழைய சமயப் பொலிவு பாண்டியில் இல்லை. நீறற்ற நெற்றி, கோவணம் இல்லாதார் சிலர். தம்மையும் தம்மைச் சார்ந்தாரையும் கண்டு, கண்டு முட்டு கேட்டு முட்டு என்று படபடத்து ஓடுகின்றனர் பலர். ஏன் இங்கு வந்தாய் என்று எதிர்ப்பை எழுப்பினர்.

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மட மானி

பங்கயச் செல்வி பாண்டிமா தேவி

பணிசெய்து நாடொறும் பரவப்

பொங்கழ லுருவன் பூதநா யகனால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவா யாவதும் இதுவே.

 

என்று வருந்திப் பாடினார். அதன் பின் அமணர்கள் அவர் தங்கி இருந்த மடத்தை எரிக என்று நெருப்பை இட்டனர். அது கண்டு,

செய்யனே, திரு ஆலவாய் மேவிய ஐயனே

அஞ்சல் என்று அருள் செய் எனை

பொய்யராம் அவுணர் கொளுவுஞ்சுடர்

பையவே சென்று பாண்டியர்க்காகவே

என்று பதிகம் பாடினார் பிள்ளையார்.

அத்தீயின் வெம்மை பாண்டியரைச் சுரநோயாகப் பற்றியது.அந்தச் சுரத்தை தீர்க்க முயன்று அமணர்கள் தோற்றனர். மங்கயர்க்கரசியார் விரைந்தார் பிள்ளையாரைப் பணிந்தார். சுவாமீ,

மன் காதலில் உய்வது இவ்வையம் எல்லாம்

மலையாள் முலையால் அமுதுண்டவனே

எம் காதலன் எம்பெருமான் அவனுக்கு இதுவோ தகவு

என்று வேந்தர் சுரநோயைத் தணிக்க விண்ணப்பித்தார்.

 

அஞ்ச வேண்டா, நிமலன் கரத்தில் நெருப்புண்டு அதை அணைக்க நீரையும் திருமுடியில் தாங்கியுள்ளான். கனல் எங்கள் கனல், புனல் எங்கள் புனல் என்று பின் நிகழ்வுள நிகழ்வையும் பிள்ளையார் குறிப்பாக முன்னே கூறினார். அதன் பின் அரசரை அணுகினார். நோக்கினார். நீறிட்டு ஆர் கெட்டார் ? விபூதியிடாது ஆர் வாழ்ந்தார்? என்றார்.

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திருவாலவாயன் திருநீறே

என்று பதிகம் பாடி நீறு பூசி அரசருக்கிருந்த சுரத்தை அகற்றினார். அதனுடன் உடன் பிறப்பான கூனும் ஒழிந்தது. நின்ற சீர் நெடுமாறர் எனும் அரியதோரு பெயரையும் அரசருக்கு பிள்ளையார் அளித்தார்.

 அப்பர்

அவர் இயற்பெயர் மருள்நீக்கியார். திருவாமூர் என்ற ஊரில் ஏழாம் நூற்றாண்டு அப்பர் பிறந்தார் . அவரது சகோதரி யார் திலகவதியார் ராணுவ தளபதியுடன் கல்யாணம் நடந்தது.10 வயது வித்தியாசம் இருவருக்கும் /.

கல்யாணம் ஆன சில நாட்களில் அவர் போரில் மாண்டு விட்டார். உடனேதிலகவதியார் தன் உயிரை மாய்த்துக்கொள்ள சென்றபோது நாவுக்கரசர் அப்படி செய்யக்கூடாது என மண்டியிட்டு அழுதார் .தன்னை தனியாக விட்டுச் செல்லக்கூடாது என. எனவே திலகவதியார் தன் சகோதரனை காப்பாற்ற முடிவு எடுத்தார். அவருக்காக வாழ்ந்தார் .சைவ சமய ஆச்சாரியார் நால்வரில் ஒருவர். 

திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார் .Pukalanar அவர் தந்தை. அவர் தாயார்.Mathiniyar. . திலகவதி பிறந்து சில வருடங்களுக்குப் பின்னால் திருநாவுக்கரசர் பிறந்தார்...

மருள்நீக்கியார் என்றால் இருளை நீக்குபவர் அல்லது அஞ்ஞானத்தை நீக்குபவர் ஞானத்தை அளிப்பவர் என்றும் கொள்ளலாம் . சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்று வித்வான் ஆனார்.

12 வயது நடக்கும்போதே கலை பகையார் என்ற ராணுவ தளபதியுடன்   

திலகவதி க்கு திருமணம் செய்ய பேச்சு சென்றது. 

 தந்தை புகழனார் நோய்வாய்ப்பட்டு இறந்தார்,, . .மனைவி Mathiniyar. யும் அந்த கால முறைப்படி சதி உடன்கட்டை ஏறி இறந்தார் .தன் தாய் தகப்பன் இறந்த துக்கம் மறைவதற்குள் ,,,,

பல்லவ அரசர் போர் முனைக்கு இராணுவ தளபதி  கலை பகையார் அனுப்பப்பட்டு அங்கு போரில் மாண்டார். 

கணவர் இறந்த செய்தி வந்ததும், தான் உடன்கட்டை ஏற விரும்பியபோது, மருள்நீக்கியார் அக்காவின் காலில் விழுந்து கதறி அழுதார். தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்று .எனவே தம்பிக்காக உயிர் வாழ்ந்தார்.சேக்கிழார் பெரிய புராணத்தில் தம்பிக்காக தாய்போல் வாழ்ந்தவர் என்றும் ,,மிகுந்த சிவ பக்தி உடையவர் என்றும் திலகவதி பற்றி குறிப்பிட்டு உள்ளார்

மருள்நீக்கியார் இளம்வயதிலேயே இந்த வாழ்க்கை நிரந்தரமற்றது. உலகம் நிரந்தரமற்றது., என்பதை புரிந்து கொண்டு பல தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்து வந்தார்.

ஜெயின மதத்தின் பால் ஈர்ப்பு கொண்டு மதம் மாறி பாடலிபுத்திரம் வரை சென்றார் அங்கு பள்ளியில் படித்தார் மாஸ்டர் டிகிரி வாங்கினார் . திலகவதியார் மிகவும் மனம் வருந்தினார் தமயன் செயலுக்காக .திருவதிகை வீரட்டானத்தில் ஒரு மடத்தை கட்டி அங்கேயே தங்கினார்.


தன் தமையனை காத்தருளும்படி இறைவனிடம் மன்றாடினார் கடவுள் அவளது கனவில் தோன்றி நீ ஒன்றும் கவலைப்படாதே ,,அவன் நிறைய தவம் செய்து விட்டான்,, அவனை ஒரு தீராத வயிற்று வலியை கொடுத்து சீக்கிரம் காப்பாற்றுவேன் என்று கூறி மறைந்தார் . ஜெயின மத தலைவர் களால் அவர் வயிற்று வலியை  நீக்க முடியவில்லை. எனவே தன் அக்காவை நினைத்து அங்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினார்.

அக்கா அவன் நெற்றியில் திருநீறு இட்டு இது சிவனின் திருவிளையாடல் என்று கூறி பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தார் [.இறைவா நான் பல தீய செயல்களில் ஈடுபட்டு ஒரு முறை கோதாவரி கரையோரம் ரிஷிகளுடன் நான் சண்டை போட்டேனே ஜெயின மதம் தான் பெரிது என்று., கடவுளே என்னை காப்பாற்று என்று அழுதார்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது இன்று முதல் நீ மருள்நீக்கியார் அல்ல திருநாவுக்கரசர். இன்று முதல் உன் புகழ் விளங்கும் என்று கூறி மறைந்தது .இவ்வாறாக திருநாவுக்கரசர் சைவமாக மாறி மிகவும் சந்தோஷமாக இருந்தார் . சிவனின் பஞ்சாட்சரத்தை சதா உச்சரித்துக்கொண்டே சிவனுக்கு அடிமையாக வாழ்ந்தார்.

ஜெயின் அரசு அவரை துரோகி என்று பட்டம் சூட்டிய போது திருநாவுக்கரசர் இனி நான் சிவனுக்கு மட்டும்தான் தொண்டு செய்வேன் அவர்தான் நம்மை காப்பவர் எல்லா பாவங்களையும் அழிக்கக் கூடியவர் என்று கூறினார் .. துன்பம் பயம் எதுவுமே என்னை நெருங்காது, என் சிவனார் ஒருமுறை எமனையே காலால் உதைத்தவர், என் சிவன் என்று கூறினார்.

திருநாவுக்கரசை அழைத்துச் செல்ல வந்த மந்திரிகள் ஜெயின் அரசருக்கு பயந்து தயவுசெய்து தங்களுடன் வருமாறு திருநாவுக்கரசை வேண்டிக்கொண்டனர் .அதன்படி இவரும் அரண்மனைக்குச் சென்றார்.

அப்பறம் என்ன செய்ய வேண்டும் என்று மத குருமார்களிடம் கேட்ட போது இவரை

1 தளதளவென்று கொதிக்கும்  சுண்ணாம்பு காளவாயிள் இட்டு தண்டனை கொடுக்க வேண்டும் என்றனர் ..அதன்படியே தள தள வென்று கொதிக்கும்  சுண்ணாம்புக் காளவாயில் வீழ்த்தப்பட்டார்.ஏழு நாட்கள் இந்த சுண்ணாம்புக் காளவாயில் வைத்து அடைக்கப்பட்டார்.

திடமான மனதுடன் சிவனையே தியானம் செய்ததனால் அது குளிர்ந்த தென்றல் ஆக மாறியது .

2 மறுபடி விஷம் கொடுத்தனர் .,விஷம் அமிர்தமாக மாறியது.

 3யானை காலால் மிதித்து கொல்ல ஏவப்பட்டனர் . ஆனாலும் சிவன் இவரை காப்பாற்றி இவர் பெருமையை உலகுக்கு உணரச் செய்தார் .இவர் சிவனை குறித்து பாடிய போது யானை அப்பரை வலம் வந்து வணங்கி சென்றுவிட்டது.

4 அப்பரை பெரிய பாறாங்கல் கட்டி கடலில் வீசச் சொன்ன போது சிவனின் கருணையால் அவர் பஞ்சாட்சரம் மந்திரம் ஓத பாறாங்கல் தண்ணீரில் அந்த பாராங்கல் மிதந்து வந்தது,, மிதந்தது.,மூழ்காமல் அப்பரை கரைக்கு ஒதுக்கியது .,. இவ்வாறாக இறைவன் அவரை காப்பாற்றினார்.

இறைவா இனி எனக்கு ஒரு பிறவி வேண்டாம். என் கர்ம பயனால் பிறவி உண்டாகும் எனில் நான் புல், பூச்சி ஆய் பிறப்பினும் உன்னை மறவாதிருக்க வேண்டும் .உன் நாமத்தை நான் கதா உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கினார் . 

திருநாவுக்கரசருக்கு திருவதிகைக்கு திரும்பியபோது பல்லவ அரசன் இவரது மேன்மையை பற்றி கேள்வியுற்று தான் சைவத்தை தழுவினார்.

பாரத தேசத்தில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன இருப்பினும் தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என கருதப்படும் 276 கோயில்கள் மிகவும் புராதனமானது சிறப்புடையது ஆகும் ஆகும் ஏனெனில் கோவில்கள் சக்தி ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்னரே தோன்றிய தேவார மூவர் என்று போற்றப்படும் ஆசாரிய பெருமக்களாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் ஆகியோர் தனியாகவோ அல்லது சேர்ந்தோ நேரில் சென்று வழிப்பட்டு தெய்வங்கள் அருளிய புண்ணிய தலம். பெருமக்கள் கைலை நாதனை கண்டு தரிசித்த பேறு பெற்றவர்கள் இந்த 276 கோயில்கள் மிகவும் தங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக அமைந்துள்ளன,
Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Inspirational